19 வகையான மளிகைப் பொருட்களை நியாய விலை கடையில் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கியது.!
19 வகையான மளிகைப் பொருட்களை நியாய விலை கடையில் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கியது.!

19 வகையான மளிகைப் பொருட்களை நியாய விலை கடையில் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் தொடங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 23,486 முழு நேர நியாய விலை கடைகள், சுய சேவை பிரிவு, சிறு பல்பொருள் அங்காடி, அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி, நகரம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக 500 ரூபாய் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
19 வகையான மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு குடும்ப அட்டை கட்டாயமில்லை என்றும், இதை யார் வேண்டுமென்றாலும் வாங்கிக்கொள்ளலாம் என குறிப்பிட்ட அவர், இதை தொகுப்பை வாங்குவதன் மூலம் பொதுமக்கள் 105 ரூபாய் சேமிக்கலாம், இதில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கன பருப்பு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தோசை புளி, பொரி கடலை, நீல மிளகாய், தானியா, மஞ்சள் தூள், டீ தூள், உப்பு, பூண்டு, கோல்டு வின்னர், மிளகாய்த்தூள் ஆகிய குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.