Kathir News
Begin typing your search above and press return to search.

1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுதான் இந்தியா - சீன எல்லையில் நடைபெற்ற முதல் துப்பாக்கி சண்டை - மோதல்கள் பற்றி முன்னாள் வெளியுறவு செயலர் நிருபமா ராவ்.!

1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுதான் இந்தியா - சீன எல்லையில் நடைபெற்ற முதல் துப்பாக்கி சண்டை - மோதல்கள் பற்றி முன்னாள் வெளியுறவு செயலர் நிருபமா ராவ்.!

1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுதான் இந்தியா - சீன எல்லையில் நடைபெற்ற முதல் துப்பாக்கி சண்டை - மோதல்கள் பற்றி முன்னாள் வெளியுறவு செயலர் நிருபமா ராவ்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Jun 2020 4:50 AM GMT

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் நடந்தது. சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததாகவும், சீன தரப்பிலும் 43 வீரர்கள் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 1967-ல் இந்தியா-சீனா துருப்புகளிடையே ஏற்பட்ட மோதல்தான் கடைசி துப்பாக்கிச் சூடு என்று கூறப்படுவதுண்டு.

ஆனால் 1962- போரில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் 5 ஆண்டுகள் சென்று 1967-ல் சிக்கிமில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் சீனாவுக்கு சேதம் ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதில் இருதரப்பினருக்கும் துப்பாக்கி சண்டை ஏற்பட்ட போதிலும் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பெரிதாக எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் 1975-ல் துலுங் லா பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்திய-சீன உறவுகளின் சிக்கல் குறித்து முன்னாள் வெளியுறவு செயலரும் சீனாவுக்கான தூதருமான நிருபமா ராவ், கூறும்போது, "1967ல்தான் கடைசி தாக்குதல் இருதரப்பிலும் நடத்தப்பட்டது, 1975 மோதல் ஒரு விபத்து என்று கூறப்படுவது உண்மைக்குப் பொருத்தமானதாக இல்லை. அது திட்டமிட்ட தாக்குதல் அதில் நம் நாட்டு ராணுவ வீரர்கள் 4 பேர் பலியானார்கள். ஆனால் அக்டோபர் 20,1975-ல் சீன ராணுவத்தினர் லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் எனப்படும் எல்.ஏ.சி-யை சீனர்கள் எல்லைகடந்து வந்து தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அப்போதும் இந்திய வீரர்கள் அத்துமீறியதாகவும் சீன முகாம் மீது தாக்கியதாகவும் சீன அயலுறவு அமைச்சகம் தெரிவித்தது. சீனாவின் தாக்குதல் தற்காப்பு உத்தியே என்று சீனா கூறியது. ஆனால் துலங் லா பகுதியில் சீன ராணுவம்தான் அத்து மீறி இந்தியப் பகுதிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது, அதுதான் கடைசி துப்பாக்கி சண்டை என்று ஆதாரங்களுடன் நிருபமா ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

அதன்பிறகு கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் தான் துப்பாக்கி மூலமான தாக்குதல் நடைபெற்றது. சீன வீரர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து திரும்பி இந்திய எல்லை நோக்கி வரத் தொடங்கியதால்தான் இந்த மோதல்கள் நிகழ்ந்தன என்றும் இந்த எதிர்பாராத நிகழ்வால் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும் சீனா தரப்பில் 43 வீரர்கள் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Next Story