Kathir News
Begin typing your search above and press return to search.

ரஜினி, கமலுக்கு இணையாக 1980-களில் கோலோச்சிய நடிகர் மோகன்!

ரஜினி, கமலுக்கு இணையாக 1980-களில் கோலோச்சிய நடிகர் மோகன்!

ரஜினி, கமலுக்கு இணையாக 1980-களில் கோலோச்சிய நடிகர் மோகன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 April 2020 9:22 AM GMT

ரஜினிக்கு ஒரு காலத்தில் பீதி கிளப்ப வைத்த நடிகர் யார் என்றால் அது நடிகர் மோகன்தான்..

இன்னும் ஒரு சுவாரஸ்யம்... கமல் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் அறிமுகமானவர்கள் பிற்காலத்தில் அவருக்கு ரெண்டு பேர் ஃடப் பைட் கொடுத்தார் ஒருவர் ரஜினி மற்றவர் மோகன் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா-?

ஆம் ரஜினி கமலுக்கு இணையான சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன் என்றால் நம்புங்கள்.

1980-ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை ரஜினி கமலின் தூக்கத்தை கெடுத்ததில் மோகனுக்கு முக்கிய பங்குண்டு....

1977-ஆம் ஆண்டு கமல் நடித்த கோகிலா மூலம்..... பாலுமகேந்திராவால் அறிமுகம் செய்யப்பட்டார்.. அதன் பின் 1980 ஆம் வெளிவந்த மூடுபனி..மற்றும் மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே... அவருக்கு ஸ்டார் அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்தது எனலாம்.

அதன் பின் வெற்றியோ வெற்றிதான்...

திரும்பி பார்க்க முடியாத , நினைத்து பார்க்க முடியாத, கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வெற்றி விழா படங்களில் நடித்தவர் மோகன்...

பயணங்கள் முடிவதில்லை... மற்றும் கிளிஞ்சல்கள் படங்களில் மோகனை தமிழ் ரசிகர்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடினைர்கள்..

25 நான் ஓடினால் இப்போது எல்லாம் பெரிய வெற்றி...

மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை... 500 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம் என்றால் நம்புங்கள்...

1978-இல் இருந்து 1988-ஆம் ஆண்டு வரை இருந்த காலம் இருக்கின்றதே... தமிழ் சினிமாவுக்கு நடிகர் மோகனுக்கு அது பொற்காலம் என்றே சொல்லலாம்..

ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் செய்த ஒரே தமிழ் நடிகர் மோன்தான்..

மூன்றில் ஒன்று பிளாப் ஆக வேண்டும் என்று அக்கலாத்தில் நிறைய பேர் வேண்டிக்கொண்டனர்..

மூன்று படங்களும் சில்வர் ஜூப்ளி திரைப்படங்கள்.

உதாரணத்துக்கு 1984-ஆம் ஆண்டு மட்டும் ஒரே வருடத்தில் மோகன் நடித்த வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா...??

மொத்தம் 19 திரைப்படங்கள்... எனக்கு தெரிந்து தமிழ் திரையுலகில் இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் முறியடிக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.

ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் ஆகி மூன்று மே வெள்ளிவிழா படங்கள் என்ற சாதனையையும் இதுவரை எவரும் வெல்லவில்லை.....

ஹீரோவாக அறிமுகமாகி முதல் மூன்று வருடங்களிலும் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்த மூன்று படங்களைக் கொடுத்த ஒரே ஹீரோ மோகன் மட்டுமே..பயணங்கள் முடிவதில்லை.நெஞ்சத்தைகிள்ளாதே, கிளிஞ்சல்கள் என்ற படங்கள்

ஆர் சுந்தர்ராஜன் இசைஞானி மோகன் இணைந்த படம் என்றாலே அது மாபெரும் வெற்றிபடம் என பேசிய காலங்கள்...

ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும் இயக்குநர்களும்..

200 நாட்கள்- மணிவண்ணன் இயக்கத்தில் கோபுரங்கள் சாய்வதில்லை

365 நாட்கள்- மகேந்திரன் இயக்கத்தில் நெஞ்சத்தை கிள்ளாதே

300 நாட்கள்- ஆர்.சுந்தர்ராஜன்-பயணங்கள் முடிவதில்லை

200 நாட்கள்- மணிவண்ணன்-இளமை காலங்கள்

300 நாட்கள்- துரை.கிளிஞ்சல்கள்

200 நாட்கள்- மணிவண்ணன். நூறாவது நாள்

200 நாட்கள்-சுந்தர்ராஜன்.நான் பாடும் பாடல்

175 நாட்கள்- கே.பாலாஜி. ஓசை

200 நாட்கள்-ரங்கராஜன். உதயகீதம்

175 நாட்கள்-சுந்தர்ராஜன். சரணாலயம்

250 நாட்கள்- ஸ்ரீதர். தென்றலே என்னை தொடு

175 நாட்கள்-சுந்தர்ராஜன். குங்குமச்சிமிழ்

200 நாட்கள்-மணிரத்னம். இதய கோவில்

175 நாட்கள்- பூபதி.டிசம்பர் பூக்கள்

175 நாட்கள்- ரங்கராஜன். உயிரே உனக்காக

250 நாட்கள்- மணிரத்னம். மௌன ராகம்

175 நாட்கள்- தீர்த்தக் கரையினிலே, 500 நாட்கள்- விதி, 175 நாட்கள்- மனைவி சொல்லே மந்திரம், 175 நாட்கள்- ரெட்டைவால் குருவி, 200 நாட்கள்- மெல்ல திறந்த கதவு, 175 நாட்கள்- சகாதேவன் மகாதேவன்

இதெல்லாம் இப்போதைய அல்ல இனி எப்போதும் கற்பனை கூட பண்ண முடியாது..

இப்படியாக 10 வருடங்கள் பட்டைய கிளப்பிய சில்வர் ஜூப்ளி நாயகன் நடிகர் மோகன் இன்று எந்த படத்திலும் நடிக்க வில்லை... 1990-க்கு பிறகு படம் இல்லாமல் தவித்தார்... ஆனால் ஏன் மோகனை அதன் பிறகு குணச்சித்திர , வில்லன் , காமெடியன் படங்களில் அவருக்கு ஏன் வாய்ப்பு தமிழ் சினிமா வழங்வில்லை என்பது பெரிய கேள்விதான்..

யோசித்து பாருங்கள் மோகனின் பார்வையில் பத்து வருடம் தூங்க கூட நேரம் இல்லாமல் நடித்தவர்... ஷார்ட் ரெடி, ஆக்ஷன், கட் போன்ற எந்த சத்தமும் கடந்த பல வருடங்களாக கேட்காமல் இருப்பது எவ்வளவு கொடுமை..

சினிமா உலகம் அப்படியானதுதான்...

Credits - Pugal Machendran's Facebook Post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News