தர்மபுரி அருகே 2 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கிளை சங்கம் திறப்பு.!
தர்மபுரி அருகே 2 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கிளை சங்கம் திறப்பு.!

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட பாலவாடி கிராம பஞ்சாயத்தில் உள்ள கூரம்பட்டி, பையூரான்கொட்டாய் கிராமங்களில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கிளை துவங்கப்பட்டது.
இந்த கிளையை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் உதவி மேலாளர் சி.முருகவேல், இண்டூர் கால்நடை மருத்துவர் டாக்டர் கே.தசரதன், உமாசங்கரி முதுநிலை ஆய்வாளர், கே.கீதா விரிவாக்க ஆய்வாளர், பாலவாடி ஊராட்சி செயலாளர் ஜம்பேரி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கானாப்பட்டி, கூரம்பட்டி, பையூரான்கொட்டாய் ஆகிய கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக கால்நடை மருத்துவர் தசரதன் கூறியதாவது: அரசு சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா கறவை பசுவின் பாலை, கூட்டுறவு பால் உற்பத்தியில்தான் ஊற்ற வேண்டும்.
இதன் மூலம் அரசு சார்பில் வழங்கப்படும் மானியம் நேரடியாக பயனாளிகளுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.