Kathir News
Begin typing your search above and press return to search.

"கே.ஜி.எஃப்-2 பற்றிய முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியீடு என தகவல்!!!

"கே.ஜி.எஃப்-2 பற்றிய முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியீடு என தகவல்!!!

கே.ஜி.எஃப்-2 பற்றிய முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியீடு என தகவல்!!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 11:01 AM GMT

கே. ஜி. எஃப் 2 படத்தின் டீசர் அல்லது புதிய போஸ்ட்ரை சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

கடந்த 2018ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த படம். யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் "கே. ஜி. எஃப் சாப்டர் 1".

இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 215 கோடிக்களுக்கு வசூல் செய்து சாதனை படைத்தது.மேலும் டிஜிட்டலில் அதிகம் பேர் பார்த்த படமாகும்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மட்டுமில்லாமல் அங்கேயும் மிகப் பெரும் சாதனையும் படைத்தது.

யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அக்டோபர் 23ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இந்த படத்தில் யாஷூடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இன்னும் 25நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும், அதில் 2 சண்டை காட்சிகளை படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சஞ்சய் தத்தின் பிறந்தநாளான ஜூலை 29 அன்று கே. ஜி. எஃப் 2 படத்தின் புது போஸ்ட்ர் அல்லது டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

Next Story