Kathir News
Begin typing your search above and press return to search.

ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் ஹீரோயின் - சந்திரமுகி-2 நியூ அப்டேட்.!

ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் ஹீரோயின் - சந்திரமுகி-2 நியூ அப்டேட்.!

ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் ஹீரோயின் - சந்திரமுகி-2  நியூ அப்டேட்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 July 2020 11:10 AM GMT

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படம் பெரிய ஹிட்டை கொடுத்தது.

அதில் நயன்தாரா, பிரபு, வடிவேலு, வினீத், மாளவிகா, நாசர், உட்பட பலர் நடித்திருந்தனர்.பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம்'சந்திரமுகி'.

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வித்யா சாகர் இசை அமைத்திருந்தார்.

மேலும் இந்தப் படத்தின் வெற்றியைக் குறித்து இயக்குனர் வாசு, சந்திரமுகி படத்தின் அடுத்த பாகத்துக்கான கதையை தான் உருவாக்கி விட்டதாகக் கூறி இருந்தார்.

தற்போது சந்திரமுகி பார்ட்-2 எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில், ராகவா லாரன்ஸ் ஜோடியாக பிரபல பாலிவுட் ஹீரோயின் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே கொரோனா லாக்டவுன் நேரத்தில், பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 ஆம் பாகத்தில், தான் நடிக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக, தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தில் இருந்து 3 கோடி ரூபாயை, கொரோனா நிவாரணத்துக்கு வழங்கினார். கொரோனா பிரச்னைகள் முடிந்த பிறகு இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

இதற்கிடையே லாரன்ஸ் தனது காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்திருந்தார். லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ள இதில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் 'டிஸ்னி ஹாட் ஸ்டாரில்' வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கியாரா அத்வானி, சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் இவர் தற்போது விஷ்ணுவர்தன் இந்தியில் இயக்கும் "ஷேர்ஷா" படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News