2 குழந்தை கொள்கையை வலியுறுத்தும் குடும்ப கட்டுப்பாட்டு சட்டம்! மசோதா கொண்டு வர மூத்த காங்கிரஸ் எம்.பி. சிங்வி முன் மொழிவு!
2 குழந்தை கொள்கையை வலியுறுத்தும் குடும்ப கட்டுப்பாட்டு சட்டம்! மசோதா கொண்டு வர மூத்த காங்கிரஸ் எம்.பி. சிங்வி முன் மொழிவு!

பல்லாயிரக்கணக்கான கோடி செலவில் செய்யப்படும் வளர்ச்சித் திட்டங்கள் முழு அளவில் வெற்றி பெற்று நாடு முன்னேறுவதற்கு புதிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் மிகவும் அவசியம் என மத்திய அரசு கருதுகிறது.
இதற்காக 2 குழந்தைகள் மற்றும் அதற்குள் பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு நிதி சலுகைகள் அளிக்கவும், 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கும், அரசு சேவைகளில் பதவி உயர்வு பெறுவதற்கும், அரசு மானியம் பெறுவதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என ஆலோசிக்கப்படுகிறது. அதே சமயம் சாதாரண ஏழை மக்களை பாதிக்காத வகையில் சட்டம் இருக்க வேண்டும் எனவும் அரசு விரும்புகிறது.
மேலும் அதிக குழந்தை பெறுவதை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு அரசு செலவிலேயே ஊக்கத்தொகைகளுடன் நவீன கருத்தடையை ஊக்குவிக்கவும் இத்திட்டத்தில் பரிசீலிக்கப்படுகிறது.
புதிய குடும்ப கட்டுப்பாடு 2020 எனப்படும் இந்த திட்டத்தை அமலாக்க நாட்டில் உள்ள மக்களிடையே அனைவருக்கும் பொருந்தும் வகையில் ஒரு வலுவான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என அரசு விரும்புகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி. யுமான அபிஷேக் மனு சிங்வி இந்த சட்டம் கொண்டுவர ஆதரித்துள்ளார். மேலும் இந்த திட்டத்துக்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைவில் அவர் முன் மொழிய உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
https://swarajyamag.com/insta/congress-mp-a-m-singhvi-to-move-bill-proposing-enforcement-of-two-child-policy-using-incentives-disincentives