Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு நாளில் 2 லட்சம் பரிசோதனைகள் - ஆய்வகங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரித்த ICMR.!

ஒரு நாளில் 2 லட்சம் பரிசோதனைகள் - ஆய்வகங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரித்த ICMR.!

ஒரு நாளில் 2 லட்சம் பரிசோதனைகள் - ஆய்வகங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரித்த ICMR.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jun 2020 11:18 AM GMT

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அத்தோடு Covid-19 வைரஸ் தொற்றை உறுதி செய்யும் RT PCR சோதனையை மேற்கொள்ளும் ஆய்வுக் கூடங்களின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரித்துள்ளது. இதில் 730 அரசு ஆய்வகங்களும் 270 தனியார் ஆய்வகங்களும் அடங்கும்.

இதனால் ஒரு நாளில் இரத்த/சளி மாதிரிகளை சோதிக்கும் திறன் இரண்டு லட்சமாக உயர்ந்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் இந்த தரவுகளை வெளியிட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பொது இயக்குனர் பல்ராம் பார்கவா கூறுகையில், "இது கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் ஒரு முக்கியமான மைல்கல். ஆரம்பத்தில் இருந்தே நாம் 3T - testing, tracking and treating, பரிசோதனை, கண்காணிப்பு ‌மற்றும் சிகிச்சை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். சோதனைகளை அதிகரித்து வைரஸை எதிர்த்து போரிட்டு வருகிறோம்" என்றார்.

"இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஆய்வுக் கூடத்தை நிறுவ வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தோம்.‌ தற்போது அதை பெருமளவு நிறைவேற்றி விட்டோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள ஆய்வகங்களில் ஜூன் 22 அன்று வரை 71 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் COVID-19 வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என அறிய சோதனை செய்யப்பட்டுள்ளன. ஜூன் 22 அன்று மட்டும் 1.87 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஜூன் 23ம் தேதி தரவுகளின் படி இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.55 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் கடந்த ஏழு நாட்களில் மட்டுமே கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News