Kathir News
Begin typing your search above and press return to search.

கே.ஜி.எஃப்-2 "OTT"ல் வெளியாகிறதா? யாஷ் விளக்கம்.!

கே.ஜி.எஃப்-2 "OTT"ல் வெளியாகிறதா? யாஷ் விளக்கம்.!

கே.ஜி.எஃப்-2  OTTல் வெளியாகிறதா? யாஷ் விளக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2020 4:19 AM GMT

நடிகர் யாஷ் நடிப்பில் கே.ஜி.எஃப் சாப்டர்-1 பிரம்மாண்டமாக பல மொழிகளில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.n வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இந்த படக்குழு இப்பொழுது தயாரித்து வெளியிட உள்ளது. இந்நிலையில் இரண்டாம் பாகம் OTT -இல் வெளியாகும் என வதந்தியை முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக யாஷ் பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில்பாகம்-1 மிகப்பெரிய வெற்றியை தந்த நிலையில் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பாகம் 2 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று முன்னே படக்குழுவினர் அறிவித்திருந்தனர் அக்டோபர் மாதத்திற்கு சில மாதங்களே உள்ள நிலையில் தியேட்டர்களில் வெளியிடப்படுமா என்ற சர்ச்சை பரவிக்கொண்டிருக்கிறது.அதே சமயம் இந்த படம் OTT -ல் வெளியாகிறது என சில செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அக்டோபர் 23ஆம் தேதி ஏற்கனவே படக்குழு அறிவித்த தேதியில் வெளியிடப்படுமா என்பது சந்தேகத்தில் உள்ளது. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் காத்திருந்து பார்ப்போம்.

Next Story