வாரக்கணக்கில் பிரிசரில் வைத்து விற்பனை.. கெட்டுப்போன 20 கிலோ பிரியாணி.. பாண்டிச்சேரி அக்பர் கடையில் பயங்கரம்.!
வாரக்கணக்கில் பிரிசரில் வைத்து விற்பனை.. கெட்டுப்போன 20 கிலோ பிரியாணி.. பாண்டிச்சேரி அக்பர் கடையில் பயங்கரம்.!

பாண்டிச்சேரியில் உள்ள புஸ்ஸி வீதியில் உள்ள அக்பர் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பிரியாணியை வாரக்கணக்கில் பிரிசரில் வைத்து விற்பனை செய்துள்ளனர்.
இதனையடுத்து காலாவதியான பிரியாணி சுமார் 20 கிலோ இருந்துள்ளது. இதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
நாள் முழுவதும் சமைத்து வைக்கும் பிரியாணி விற்பனை செய்த பின்னர் மீதி ஆகுவதை பிரிசரில் வைத்துள்ளனர்.
மீண்டும் அதனை அடுத்த நாள் விற்பனை செய்து வந்துள்ளனர். பல நாட்கள் ஃபிரிசரில் வைத்திருந்து பொதுமக்களிடம் விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பல ஓட்டல் கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை சோதனை தொடருமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது போன்ற கெட்டுப்போன உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடை மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.