ஸ்டாலினின் அப்பட்ட பொய்களை திட்டவட்டமாக மறுத்த கேந்திர வித்யாலயா பள்ளி - விரக்தியின் உச்சியால் திட்டமிட்ட பொய்யுரைகளின் கூடாரமாகிறதா தி.மு.க?
ஸ்டாலினின் அப்பட்ட பொய்களை திட்டவட்டமாக மறுத்த கேந்திர வித்யாலயா பள்ளி - விரக்தியின் உச்சியால் திட்டமிட்ட பொய்யுரைகளின் கூடாரமாகிறதா தி.மு.க?
By : Kathir Webdesk
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் "சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்தரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்." என்று கூறப்பட்டு இருந்தது.
இதை ஏற்கனவே சென்னை மாகாண கேந்திர வித்யாலயா சங்கத்தானின் துணை ஆய்வாளர் திட்டவட்டமாக மறுத்து இருந்தார்.
இந்த மறுப்பிற்கு பிறகும் திட்டமிட்ட அவதூறுகளை மு.க.ஸ்டாலின் பரப்பி வந்த நிலையில் கேந்திர வித்யாலயா நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை மறுத்துள்ளது. இது குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள கேள்வித்தாள் எந்த கேந்திர வித்யாலயாவிலும் கேட்கப்படவில்லை என்றும் இது ஒரு போலி செய்தி என்றும் திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது.
போலி செய்திகளை மீண்டும் மீண்டும் பதிவு செய்து சமூதாயங்கள் மத்தியில் பகைமையை தூண்டி அதன் மூலமாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என விரக்தியின் உச்சிக்கே சென்றூள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் என்பது தெளிவாகிறது.