திடீர் மனித உரிமைப் போராளிகளுக்கு ஒரு சரித்திரப் பாடம்!
திடீர் மனித உரிமைப் போராளிகளுக்கு ஒரு சரித்திரப் பாடம்!
By : Kathir Webdesk
காஷ்மீரில் மனித உரிமைகளைப் பறித்து சிறுபான்மையினரின் வாழ்வைப் பல ஆண்டுகளாக நாசுக்காக காரணியாக இருந்த அரசியல் சாசனப்பிரிவு 370 மற்றும் 35A நீக்கத்தை ஒட்டுமொத்த இந்தியாவே வரவேற்றுள்ள நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க மட்டும் எதிர்க்கின்றனர். மனித உரிமை மீறப்படுவதாக பொய் குற்றச்சாட்டையும் பரப்பி வருகின்றனர். இதனிடையே 2 ஐஏஎஸ் அதிகாரிகள் இந்தியாவில் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப் படுகின்றது என்று போகிற போக்கில் ஒரு கற்பனை செய்தியை அள்ளி வீசி விட்டு பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளனர். இந்நிலையில் நாம் அவர்களுக்கு சரித்திரத்தை நினைவு படுத்த வேண்டியது கடமை, இல்லையெனில் அவர்கள் கூறுவது உண்மை என்கின்ற பிம்பம் உண்டாகி விடும். அவர்கள் பொய்யை உடைக்க இதோ சில சரித்திர துணுக்குகள்.
மனித உரிமை ஆர்வளர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்களுக்கு நம் முதல் கேள்வி மனித உரிமை என்பது இஸ்லாமிய மதத்தைக் கடை பிடிக்கும் மனிதர்களுக்கானது மட்டுமா? காரணம் காஷ்மீரின் சிறப்பு சட்டப் பிரிவானது வால்மீகி இனத்தைச் சார்ந்த பட்டியலின மக்கள் மலம் அள்ளும் தொழில் தவிர வேறு தொழிலை செய்ய இயலாத நிலையை உருவாக்கி இருந்தது. அவர்கள் நன்கு படித்தாலும் அரசாங்க வேலைக்கு தகுதி கிடையாது. அவர்களால் அங்கு சொத்து வாங்க முடியாது, தொழில் துவங்க முடியாது, ஓட்டளிக்க முடியாது. அவர்களுக்கு இட ஒதுக்கீடும் கிடையாது. கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போன்ற ஒரு படிநிலைக்கு தள்ளப் பட்டிருந்தனர். இது காஷ்மீரின் 60 ஆண்டுகால அவலம். இதனை இந்த திடீர் போராளிகள் கடந்த 60 ஆண்டுகளில் கேள்வி கேட்டதே இல்லை.
1980-களில் பாகிஸ்தான் தனது இஸ்லாமிய பயங்கரவாதித்தின் வெற்றியை ஆப்கானிஸ்தான் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் சுவைத்திருந்தது. சோவியத் ரஷ்யாவின் கம்யூனிஸ்டுகளை அமெரிக்கா, பாகிஸ்தானின் உதவியோடு ஆப்கானிஸ்தானில் இருந்து ஒழித்த மிதப்பில் இருந்தது. இந்த வெற்றிதான் பாகிஸ்தான் இந்தியாவில் வாலாட்ட உதவியது. அங்கே இருந்த இஸ்லாமியர்களை மூளை சலவை செய்ய துவங்கியது. ஆர்டிகள் 370 மற்றும் 35A அதற்கு மிகவும் உதவியது. காரணம், அது காஷ்மீர் மக்களை இந்தியாவுடன் முழுவதுமாக இணையாமல் பார்த்துக்கொண்டது. அதன் நீட்சியாக 1990-ல் பல லட்சக்கணக்கான காஷ்மீர் ஹிந்துக்கள் கொத்துக் கொத்தாக வெளியேற்றப் பட்டனர். பல ஆயிரம் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். இதை எதையுமே காஷ்மீர் முஸ்லிம்கள் இன்று வரை கண்டித்ததில்லை. ஆனால், இன்று மனிதாபிமானப் பாடம் எடுக்கும் எவரும் அன்று கூக்குரலிடவில்லை. மாறாக காஷ்மீர் இஸ்லாமியர்களின் மனம் நோகக்கூடாது என்பதிலேயே குறியாக இருந்தனர்.
காஷ்மீரில் இருக்கும் சீக்கியர்கள், ஹிந்துக்கள்(வால்மீகி, குஜ்ஜார், பிராமணர்), சுன்னி அல்லாத இஸ்லாமியர்கள், பவுத்தர்கள் இவர்களுக்கெல்லாம் இது நாள் வரை மறுக்கப்பட்ட சம உரிமையை பற்றி இதுவரை வாய் திறக்காதவர்கள் இன்று நம் எல்லோருக்கும் மனிதாபிமானப் பாடம் எடுக்கிறார்கள்.
ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுகிறது என்று இன்று கூக்குரலிடும் சில்வண்டுகளுக்கு நாம் எடுத்துரைக்க வேண்டிய பாடங்களும் சில உள்ளது. எமெர்ஜன்சி என்கிற கொடுங்கோல் நிலையைக் கொண்டு வந்தது காங்கிரஸ், அடிக்கடி அரசியல் சாசன பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சிக் தலைப்புக்களை நிகழ்த்தியுது காங்கிரஸ், சீக்கிய இனப்படுகொலைகளை நிகழ்த்தியது காங்கிரஸ் கட்சி. இவையனைத்தையும் பார்த்தும் பாராதது போல் சென்றவர்கள் தான் இன்று நமக்கு ஜனநாயகப் பண்பை போதிக்கிறார்கள்.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சம உரிமை, மனித நேயம் என்று கூறி பயங்கரவாதிகளுக்கு மக்களிடம் வெகுஜன ஆதரவு திரட்டுவதுதான் இந்த திடீர் போராளிகளின் நோக்கம் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.