Kathir News
Begin typing your search above and press return to search.

இலவச ரேஷன் திட்டத்தை நவம்பர் 2020 வரை நீட்டித்ததற்காக பிரதமருக்கு, ராம் விலாஸ் பஸ்வான் நன்றி தெரிவித்தார்.!

இலவச ரேஷன் திட்டத்தை நவம்பர் 2020 வரை நீட்டித்ததற்காக பிரதமருக்கு, ராம் விலாஸ் பஸ்வான் நன்றி தெரிவித்தார்.!

இலவச ரேஷன் திட்டத்தை நவம்பர் 2020 வரை நீட்டித்ததற்காக பிரதமருக்கு, ராம் விலாஸ் பஸ்வான் நன்றி தெரிவித்தார்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 July 2020 8:40 AM GMT

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வரும் (நேரடி பலன் பரிவர்த்தனையில் வருபவர்கள் உட்பட) அனைத்துப் பயனாளிகளுக்கும் (அந்தியோதயா உணவுத் திட்டம் - AAY மற்றும் முன்னுரிமைக் குடும்பங்கள் - PHH) ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ கூடுதல் உணவு தானியங்கள் வழங்குவதற்கான வழிமுறை, தயார்நிலை மற்றும் அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்க காணொளி மூலம் ஊடகச் சந்திப்பு ஒன்றை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு ராம் விலாஸ் பாஸ்வான் இன்று நடத்தினார்.

ஏழைகள் மற்றும் தேவை இருப்போர் பசியில் தவிக்காமல் இருப்பதற்கும், தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று சமயத்திலும், மழைக்காலத்திலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்திலும் அவர்கள் இலவச ரேஷன் பொருள்களைப் பெறும் வகையிலும் இந்தத் திட்டத்தை நவம்பர் இறுதி வரை நீட்டித்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு திரு பாஸ்வான் நன்றி தெரிவித்தார்.

இன்று, அதாவது 1 ஜூலை, 2020 அன்று தொடங்கும் பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டத்தின் இரண்டாவது கட்டம் நவம்பர் 2020 இறுதி வரை அமலில் இருக்கும் என்று திரு பஸ்வான் ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில், 80 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக மொத்தம் 200 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் வழங்கப்படும்.

அதோடு, மொத்தம் 9.78 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகளும் 20 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும். இரண்டு திட்டங்களையும், அதாவது பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்-I மற்றும் பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்-II ஆகியவற்றை ஒன்று சேர்த்தால், மொத்த செலவு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஊடகங்களிடம் பேசிய திரு. பஸ்வான், இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள 80 கோடிக்கும் அதிகமான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப் பயனாளிகளுக்கு, ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ கூடுதல் உணவு தானியங்கள் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ பருப்பு அவர்களின் வழக்கமான மாதாந்திர ஒதுக்கீட்டை தாண்டி கூடுதலாக தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அமைச்சகத்தின் மூலம் 30 ஜூன், 2020 அன்று உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலவச உணவு தானியங்களின் விநியோகத்தை உடனடியாகத் தொடங்கி அடுத்த ஐந்து மாதங்களுக்கு தொடர்ந்து வழங்க அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தற்போது கூடுதலாக 10 சதவீதம் உணவு தானியங்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்கும் போது கூடுதலாக உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News