Kathir News
Begin typing your search above and press return to search.

2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்ன யோஜனா திட்ட முதல் கட்டம்.!

2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்ன யோஜனா திட்ட முதல் கட்டம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 1:29 PM GMT

இந்திய உணவுக்கழகத்தின் அறிக்கையின் படி, அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், மூன்று மாதத்துக்கான உணவு தானியங்களாக, மொத்தமாக 118 லட்சம் மெட்ரிக் டன் ((99%)_ஐ இந்திய உணவுக்கழகத்தின் டிப்போக்கள்/ மத்தியத் தொகுப்பிலிருந்து, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகளுக்கு கூடுதலாக இலவச உணவு தானியங்களை வழங்குவதற்காக பெற்றுள்ளன. 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்துக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மொத்தமாக 111.52 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை (93.5%) விநியோகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய உணவுக் கழகத்தின் அறிக்கைப்படி, 2020 ஏப்ரல், மே மாதங்களுக்கு , மாதந்தோறும் 75 கோடி பயனாளிகளுக்கு , 37.5 லட்சம் மெட்ரிக் டன் (94%) உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்துக்கு 73 கோடி பயனாளிகளுக்கு 36.54 லட்சம் மெட்ரிக் டன் (92%) உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக, 2020 மார்ச் மாதம், நாட்டில் கோவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார தடங்கல்களால் ஏழை,எளிய மக்கள், மற்றும் பாதிக்கப்பட்டோர் எதிர்நோக்கிய சிரமத்தைக் குறைக்கும் வகையில், பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை "பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்ன யோஜனா'' திட்டத்தை 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்துக்கு அமல்படுத்தத் தொடங்கியது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப் பயனாளிகள், ஏழைகள், பாதிப்படைய வாய்ப்புள்ளோர், முன்னெப்போதும் கண்டிராத இந்தச் சிக்கலான நேரத்தில் உணவு இல்லாமல் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு இது வழங்கப்பட்டது.

இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்பத்தினர் அடங்கிய தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் 81 கோடி பயனாளிகளுக்கு கூடுதல் உணவுப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மாதத்துக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை , அவர்களது மாதாந்திர ஒதுக்கீட்டுக்கு அதிகமாக விநியோகிக்கப்பட்டது.

2020 மார்ச் 30-ஆம் தேதி நிலவரப்படி, உணவு மற்றும் பொது விநியோகத் துறை, மாநிலங்கள்/ யூனியன் பிரதேச வாரியாக 121 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ( மாதத்திற்கு சுமார் 40 லட்சம் மெட்ரிக் டன்) ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. 2020 ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு, அதாவது திட்டத்தின் முதல் கட்டமாக, அனைத்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக இது ஒதுக்கப்படுகிறது என மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News