2021 தமிழக சட்டப்பேரவையில் பா.ஜ.க. எம்எல்ஏக்கள் இடம்பெறுவார்கள் - எல்.முருகன் நம்பிக்கை
2021 தமிழக சட்டப்பேரவையில் பா.ஜ.க. எம்எல்ஏக்கள் இடம்பெறுவார்கள் - எல்.முருகன் நம்பிக்கை

தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகன் சென்னை வந்தார். அவருக்கு மிகவும் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் கமலாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியதாவது:
2021 தமிழக சட்டப்பேரவையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. க்கள் இடம்பெறுவார்கள். அதை நோக்கியதாகவே எனது பயணம் இருக்கும்.
தமிழக நலன், தமிழர்கள் நலனை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோன்.
பா.ஜ.க. வில் தற்போது இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் அதிகளவில் இணைந்து வருகிறார்கள். சி.ஏ.ஏ. உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக நடைபெறும் தவறான பிரசாரங்களுக்கு பதிலாக, வரும் 20-ஆம் தேதி முதல் அடுத்தமாதம் 5-ஆம் தேதி வரை "உண்மையைச் சொல்வோம்; உரக்கச் சொல்வோம்" என்னும் பரப்புரை பயணத்தை எல்லா கிராமங்களிலும் மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு பா.ஜ.க. தமிழ் மாநில தலைவராக பொறுப்பேற்ற பின் சென்னையில் நடைபெற்ற தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.