சென்னையில் 24,000 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.. அமைச்சர் தகவல்..
சென்னையில் 24,000 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.. அமைச்சர் தகவல்..

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பற்றி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசியது :
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியது போல அனைவரும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். அப்போது தான் தொற்று பரவாமல் நம்மை காத்துக்கொள்ள முடியும் .
போலியோவை சவாலாக எதிர்த்து இந்தியா அழித்துள்ளது . அதுபோல கண்ணுக்கு தெரியாத இந்த கொரோனாவ வைரஸ் தொற்றறையும் ஒழிப்போம். கொரோனா வைரஸ் தொற்றறை விரட்ட அரசின் கூறும் அனைத்து அறிவுரைகளையும் மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் 3 மீட்டர் இடைவெளியை கடைபிடிப்பது நல்லது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நிவாரண நிதி கிடைக்கும். சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதற்கு 044-25384520 இந்த எண்ணை அழைத்தால் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சந்தேகங்கள் பற்றிய கேள்விகளை மக்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் . இதுவரை 2000 அழைப்புகள் வந்துள்ளன.
சென்னையில் இதுவரை 24,000 பேரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 2,064 பேரை அரசின் காப்பங்கங்களில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.