Kathir News
Begin typing your search above and press return to search.

சத்தீஸ்கர்: 25 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கீழே போட்டு சரண் - பாதுகாப்புப் படையினரின் வெற்றி.! #chhattisgarh #Maoists #surrender

சத்தீஸ்கர்: 25 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கீழே போட்டு சரண் - பாதுகாப்புப் படையினரின் வெற்றி.! #chhattisgarh #Maoists #surrender

சத்தீஸ்கர்: 25 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கீழே போட்டு சரண் - பாதுகாப்புப் படையினரின்  வெற்றி.! #chhattisgarh #Maoists #surrender

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 July 2020 8:54 AM GMT

காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக, 25 மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கரில் உள்ள டான்டேவாடாவில் சரணடைந்துள்ளனர். மாவோயிஸ்டுகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய ஊக்குவிக்கும் பாதுகாப்புப் படையினர் நடத்தும் பிரச்சாரத்திற்கு இது மற்றொரு வெற்றியாகும். சரணடைதல் நிகழ்வு ஜூலை 8 புதன்கிழமை தாந்தேவாடா போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் நடைபெற்றது.

சரணடைந்த மாவோயிஸ்டுகள் அவர்கள் சித்தாந்தம் மற்றும் எடுக்கப்பட்ட பாதையில் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறியுள்ளனர். சரணடைந்தவர்களில் மூன்று மாவோயிஸ்டுகள் மீது ஒரு லட்ச ருபாய் பரிசுத் தொகை மாநில அரசு அறிவித்திருந்தது. மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் சிலரும் இந்த நிகழ்வில் சரணடைந்தனர்.

நிகழ்வில் சரணடைந்த ஒரு மாவோயிஸ்ட் தம்பதியினர் CRPF மற்றும் காவலர்கள் மீது NMDC அருகே நடந்த தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்களின்படி, டான்டேவாடாவில் இன்னும் பல மாவோயிஸ்டுகள் ஏற்கனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் CRPF DIG முன் சரணடைந்துள்ளனர். சரணடைந்த மாவோயிஸ்டுகளுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலை கிடைப்பதற்கு உதவுவேன் என்று CRPF DIG கூறினார்.

பாதுகாப்புப் படையினரால் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இதுவரை 58 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். வன்முறை சித்தாந்தத்தை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கான மாவோயிஸ்டுகள் அதிக எண்ணிக்கையில் சரணடைவது ஒரு பெரிய வெற்றியாக காவல்துறை பார்க்கிறது.

Cover Image Courtesy: hariboomi.com

Source: Organiser Weekly

Next Story
கதிர் தொகுப்பு
Trending News