Kathir News
Begin typing your search above and press return to search.

மும்பை மருத்துவமனையில் 26 செவிலியர்கள், 3 மருத்துவர்கள் கொரோனாவால் பாதிப்பு! மருத்துவமனை மூடப்பட்டது..

மும்பை மருத்துவமனையில் 26 செவிலியர்கள், 3 மருத்துவர்கள் கொரோனாவால் பாதிப்பு! மருத்துவமனை மூடப்பட்டது..

மும்பை மருத்துவமனையில் 26 செவிலியர்கள், 3 மருத்துவர்கள் கொரோனாவால் பாதிப்பு! மருத்துவமனை மூடப்பட்டது..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 April 2020 1:24 PM GMT

சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் இருந்து பரவி உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். இதனால் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.இந்தியாவில் 4ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 102 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் மகாராஷ்டிராவில் 781 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை மாநகராட்சி ஒரு அறிவிப்பு விடுத்துள்ளது: அது என்னவென்றால் மும்பையில் உள்ள ஒக்கார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சென்ற ஒரு வாரத்தில் 26 செவிலியர்கள், மூன்று மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனைக்கு யாரையும் அனுமதிப்பதில்லை.

இதனை பற்றி மாநகராட்சி ஆணையாளர் சுரேஷ் ககானி கூறியது: மருத்துவமனையில் எப்படி இவ்வளவு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சுகாதார அதிகாரிகள் கீழ் உள்ள குழுவினர்கள் விசாரணை நடத்துவார்கள். இவர்கள் அனைவரும் முன் எச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Source: https://www.dailythanthi.com/News/India/2020/04/06161027/Corona-damage-to-26-nurses-3-doctors-Mumbais-famous.vpf

Next Story