Kathir News
Begin typing your search above and press return to search.

320தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ காத்திருப்பு - 27ஏவுதளங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் : உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை!

320தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ காத்திருப்பு - 27ஏவுதளங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் : உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை!

320தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ காத்திருப்பு - 27ஏவுதளங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் : உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2020 7:26 AM GMT

எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் 27 ஏவுதளங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து 320 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுதந்திர தினத்திற்கு முன்னதாக ஊடுருவல் முயற்சிகள் அதிகரிப்பதாக உளவு ஏஜென்சிகள் எச்சரித்துள்ளன.

பல தொலைப்பேசி உரையாடல்களை இந்திய உளவுப்பிரிவு பிரிவு (ரா) பகுப்பாய்வு செய்து தடுத்து நிறுத்தியதுடன், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறைவாக நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான ஆதாரங்களின்படி, 35 பயங்கரவாதிகள் மட்டுமே இந்த ஆண்டு நாட்டிற்குள் பதுங்க முடிந்தது. 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 429 எல்லை மீறிய தாக்குதல் நடந்திருப்பதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 605 ஆக இருந்ததாகவும் எம்.எச்.ஏ தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், குப்வாராவில் பாதுகாப்பு படையினரால் ஒரு பிக்-அப் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதிலிருந்து இரண்டு ஏ.கே .௪௭ tதுப்பாக்கிகளையும், இரண்டு சாதாரண துப்பாக்கிகளையும், 20 கையெறி குண்டுகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர்.

கையெறி குண்டுகளில் சீன அடையாளங்கள் இருந்தன தெற்கு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைக்காக இந்த ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News