ஊரடங்கு உத்தரவு மீறல் - 2,746 பேர் மீது வழக்குப்பதிவு, 20,435 - க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்.!
ஊரடங்கு உத்தரவு மீறல் - 2,746 பேர் மீது வழக்குப்பதிவு, 20,435 - க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்.!

புதுச்சேரியில் மாநிலத்தில் ஊரடங்கு தொடர்ந்து மே-3ம் தேதி வரை நடைமுறை படுத்தப்படவுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றுவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுளார். இதன் காரணமாக தற்போது 3 பேர் மட்டுமே கதிர்காமம் பகுதியில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்தொற்று அதிகரிக்காமல் இருக்க அரசும், காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற்னர்.
இதனை மீறி பலரும் வெளியே வருவதால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருசக்கர வாகங்களையும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக தடையை மீறி வருவோர், இரண்டு, மூன்று பேர் என்று இருசக்கர வாகனத்தில் வருவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 30வது நாளாக இதுவரை 2,746 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 20,435 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக நேற்று மட்டும் புதுச்சேரியில் 30 பேர் மீதும் , காரைக்காலில் 8 பேர், மாஹே 2 , ஏனாமில் 1 என 41 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.