Kathir News
Begin typing your search above and press return to search.

பாலம் கட்டுவதற்கு சீனா நிறுவனத்துடனான ரூ .2,900 கோடி ஒப்பந்தத்தை பீகார் அரசு ரத்து செய்தது.!

பாலம் கட்டுவதற்கு சீனா நிறுவனத்துடனான ரூ .2,900 கோடி ஒப்பந்தத்தை பீகார் அரசு ரத்து செய்தது.!

பாலம் கட்டுவதற்கு சீனா நிறுவனத்துடனான ரூ .2,900 கோடி ஒப்பந்தத்தை பீகார் அரசு ரத்து செய்தது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jun 2020 7:59 AM GMT

பீகார் தலைநகர் பாட்னாவில் பெரிய பாலம் கட்டுவதற்காக சீனா நிறுவனத்துடனான ரூபாய். 2,900 கோடி ஒப்பந்தத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.

கடந்த 16ஆம் தேதி இந்திய - சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா-சீனா இடையே பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது. பின்னர் இந்தியாவில் உள்ள பல இடங்களில் சீனாவை கண்டித்தும் மற்றும் பொருட்களை தவிர்ப்பதற்கு பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், சீனா நாட்டின் பொருட்களை,செயலிகள் போன்றவற்றை இந்தியா மக்கள் புறக்கணித்து வருகின்றனர். இதற்கு மத்திய அமைச்சர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்பிறகு மகாராஷ்டிரா அரசு சீனா நிறுவனத்துடனான 5 ஆயிரம் கோடி மதிப்பிலான பல ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பீகார் மாநிலத்தில் பெரிய பாலம் கட்டுவதற்கு இரண்டு சீனா நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ரூபாய் 2,900 கோடி ஒப்பந்தத்தை பீகார் அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

பாட்னாவில் உள்ள கங்கை நதிக்கு குறுக்கே இணைக்கும் நான்கு வழி பாலத்தை கட்ட முடிவு எடுக்கப்பட்டது. அதில் ஒரு ரயில்வே பாலம், நான்கு சிறிய பாலம், 13 சாலைகளை இணைக்கும் பாலங்கள், பேருந்துகள் நிறுத்து வந்ததற்கு 5 நிறுத்தங்கள் கொண்ட திட்டம் ஆகும். இந்த பாலம் 5.63 கிலோமீட்டர் தொலை தூரத்தில் கொண்டது. இந்த திட்டம் 2,900 கோடியில் வடிவமைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை கடந்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இதனை டெண்டர் மூலம் விடப்பட்டதில் இரண்டு சீனா நிறுவனங்களை பீகார் அரசு தேர்வு செய்தது. தற்போது இந்த ஒப்பந்தத்தை பீகார் அரசு ரத்து செய்தது.


இதனை பற்றி பீகார் மாநில சாலைப் போக்குவரத்து அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ் ஏஎன்ஐ செய்தியிடம் கூறியது: சீனா நிறுவனமான ‛சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி', ‛ஷான்க்ஸி ரோட் பிரிட்ஜ் கம்பெனி' இந்த இரண்டு நிறுவனத்துக்கு தான் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. இதில் சீனா நிறுவனம் இன்றி திட்டத்தை நடத்த கோரினோம். ஆனால், இதனை இரண்டு நிறுவனமும் மறுத்ததால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம் என தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News