Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்ரீராமஜென்ம பூமியில் கால் பதித்த முதல் பிரதமர் என்ற சிறப்பை பெற்றார் மோடி! அயோத்தி வந்தும் ஸ்ரீராமஜென்ம பூமிக்கு வராத 3 பிரதமர்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 7:36 AM GMT

நாடு சுதந்திரம் அடைந்த பின் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த முதல் பிரதமராக மோடி வரலாறு படைத்துள்ளார். இதற்கு முன்னர் அயோத்திக்கு வந்த இந்தியாவின் 3 பிரதமர்கள், நிலப்பிரச்சனையால் ஸ்ரீராமஜென்ம பூமிக்கு வராமல் விலகி இருந்துள்ளனர்.

இதில், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருடன் பாஜகவின் அட்டல் பிஹாரி வாய்பாய் பெயரும் இடம் பெற்றுள்ளது. அயோத்தியில் நிலப்பிரச்சனை முடிவிற்கு வந்தமையால் அங்கு இன்று ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடைபெற்று வருகிறது.

இதன் பின்னணியில் இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையே நடைபெற்ற நிலப்பிரச்சனை வழக்கு காரணமாக இருந்துள்ளது. இங்கு செல்வதன் மூலம் அவ்விரு மதத்தினரின் வாக்குகளையும் தேர்தலில் பணயம் வைக்கும் அபாயமும் ஏற்பட்டது.

இந்த 3 பிரதமர்கள் பட்டியலில் காங்கிரஸின் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பாஜகவின் அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனவே, தற்போதைய பிரதமர் மோடியின் வருகை முதல்முறை எனக் கருதப்படுகிறது.

Next Story