மத்திய அரசு திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் மாடுகளுக்கு காதுவில்லை
மத்திய அரசு திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் மாடுகளுக்கு காதுவில்லை

மத்திய அரசு திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் மாடுகளுக்கு காதுவில்லை
மத்திய அரசின் திட்டத்தின் படி கடலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் மாடுகளுக்கு காதுவில்லை அணிவிக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு மாடு வளர்ப்போர் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் குபேந்திரன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அவர்களின் அறிவிப்பு வருமாறு:
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் முதலாவது கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் மாடுகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அனைத்து மாடுகளுக்கும் (ஐ.என்.ஏ.பி.எச் எண்) காதுவில்லை அணிவிப்பது இந்திய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு வழங்கப்படும் காதுவில்லை எண், கால்நடைபெருக்கம் மற்றும் நலப்பணிகள் தகவல் தொகுப்பில் தொகுக்கப்பட உள்ளது. எனவே கால்நடை பராமரிப்புத்துறையினர் கிராமத்திற்கு வரும் போது தடுப்பூசி பணியினை மேற்கொள்வதற்கும் காது வில்லை அணிவிப்பதற்கும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
காது வில்லைகள் கட்டாயமாக்கப்பட்டதற்கான காரணம் கால்நடைகளை அடையாளப்படுத்துவதற்கும் உரிமையாளர்கள் யாரென அறிவிதற்கும் கால்நடைகள் தொலைந்து போகும் பட்சத்தில் கண்டறிவதற்கும் இன்றியமையாததாக இருக்கும்.
இனிவரும் காலங்களில் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கத்தால் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் கால்நடைகளின் காதுவில்லையின் எண்கள் அவசியம் என்பதால் பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை எண் மற்றும் கைபேசி எண்ணை தவறாமல் தடுப்பூசி முகாமிற்கு கொண்டு வர வேண்டும். காது வில்லை அணிவதால் மாடுகளுக்கு எவ்வித தீங்கும் நேராது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் மாடுகளுக்கு காதுவில்லை அணிவிக்கப்படுகிறது.