காரைக்காலில் ஊரடங்கால் நாள்தோறும் மூன்று வேலையும் 100 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவளிக்கும் தந்தை மற்றும் மகன்.!
காரைக்காலில் ஊரடங்கால் நாள்தோறும் மூன்று வேலையும் 100 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவளிக்கும் தந்தை மற்றும் மகன்.!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி அரசு
மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலையோரத்தில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுகளை அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது.மேலும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளாதல் சாலையில் சுற்றித்திரியும் நாய்கள், காகங்கள் மற்றும் பூனைகள் உணவின்றி தவித்து வருகிறது.
இந்நிலையில் காரைக்காலை சேர்ந்த சமூக ஆர்வலர் சோழ சிங்கராயன் மற்றும் அவரது மகன் ஆகியோர் இணைந்து பசியோடு சாலைகளில் சுற்றித்திரியும் 100க்கும் நாய்கள், காகம் மற்றும் பூனைகளின் பசியை போக்கும் வகையில் தினமும் 3-வேலை உணவளித்து வருகின்றனர். கடற்கரை சாலை, நகரப்பகுதியில் ம சுற்றி வரும் பறவைகளுக்கும் தின்பண்டங்கள் மற்றும் உணவுகள் அளித்து பறவை, விலங்கினங்களின் பசியை போக்கி வருகிறார். அவரின் இச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.