Kathir News
Begin typing your search above and press return to search.

பாமகவுடன் நேருக்கு நேர் மோதல்.? 3 தொகுதியை குறிவைத்த விசிக.!

பாமகவுடன் நேருக்கு நேர் மோதல்.? 3 தொகுதியை குறிவைத்த விசிக.!

பாமகவுடன் நேருக்கு நேர் மோதல்.? 3 தொகுதியை குறிவைத்த விசிக.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Feb 2019 11:36 AM GMT


நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியில் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளது. அதே போன்று விசிகவும் திமுக கூட்டணியில் இடம் பெறுகிறது.


இந்நிலையில், வி.சி.க தரப்பிலிருந்து 3 தொகுதிகளைக் கேட்க அந்தக் கட்சி முடிவுசெய்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருவள்ளூர், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.


ஆனால், இந்த முறை சிதம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளின் பெயரைக் குறிப்பிட்டு அதில் 3 தொகுதிகளை கேட்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கும் சிதம்பரம், கள்ளக்குறிச்சி அல்லது விழுப்புரம் ஒதுக்கப்படும் என்ற பேச்சு உள்ளது.


பெரும்பாலும் இந்தத் தொகுதிகள் பா.ம.க-வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால், வி.சி.க., பா.ம.க-வுக்கு இடையே கடும் போட்டி நிலவும். இதனால் அந்த இரண்டு தொகுதிகளிலும் இப்போதே பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News