Kathir News
Begin typing your search above and press return to search.

பூந்தமல்லியில் 30 சி.ஆர்.பி.எஃப். காவலர்கள் கொரோனாவால் பாதிப்பு.!

பூந்தமல்லியில் 30 சி.ஆர்.பி.எஃப். காவலர்கள் கொரோனாவால் பாதிப்பு.!

பூந்தமல்லியில் 30 சி.ஆர்.பி.எஃப். காவலர்கள் கொரோனாவால் பாதிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 July 2020 12:20 PM GMT

பூந்தமல்லி அருகில் உள்ள கரையான்சாவடியில் மத்திய பாதுகாப்பு படை காவலர்களின் 77வது பட்டாலியன் இருக்கின்றது. அதில் 100-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படை காவலர்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் பொது சுகாதார நிறுவனத்தில் 47 காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களை ஆவடியில் உள்ள ரிசர்வ் காவலர்கள் பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த முப்பது காவலர்களுக்கு ஒரே நாளில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்கு வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் படை காவலர் தலைமை அலுவலகத்துக்கு செல்வதால் அங்கு இருப்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சில நாட்களுக்கு முன்பு பூந்தமல்லியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கும் 50 ஊழியர்களுக்கு ஒரே நாளில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது படை காவலர்கள் 30 பேருக்கு குறைவாக இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story