Kathir News
Begin typing your search above and press return to search.

கன்னியாகுமரி : சோதனை சாவடி பிரச்சினையால் அல்லலுறும் 3000 மேற்பட்ட பொதுமக்கள் - கண்திறக்குமா மாவட்ட நிர்வாகம்.?

கன்னியாகுமரி : சோதனை சாவடி பிரச்சினையால் அல்லலுறும் 3000 மேற்பட்ட பொதுமக்கள் - கண்திறக்குமா மாவட்ட நிர்வாகம்.?

கன்னியாகுமரி : சோதனை சாவடி பிரச்சினையால் அல்லலுறும் 3000 மேற்பட்ட பொதுமக்கள் - கண்திறக்குமா மாவட்ட நிர்வாகம்.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 July 2020 10:29 AM GMT

தமிழக கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பேரூராட்சி, காக்கவிளையில் அமைய வேண்டிய சோதனை சாவடியானது ஏழு வருடங்கள் முன்பாக காக்கவிளையிலிருந்து 2 கிமீ உள்ளே பழைய முடிபுரை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் ஆலயம் பகுதியில் அமைக்கபட்டது.

அந்த பகுதியில் சுமார் 850 மேற்பட்ட வீடுகளுகளும் 3000 மேற்பட்டோர் வசிக்கின்றனர் இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் கட்டிட பணிகளுக்கும். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் படி வீடுகள் கட்ட 2லட்சம் பத்தாயிரம் ரூபாய் வரை பயனாளிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் கொல்லங்கோடு பேரூராட்சி மற்ற பகுதிகளில் செலவாகும் தொகையை விட அதிகமாக கட்டுமானப்பொருட்களை சோதனை சாவடியை கடந்து கொண்டு வர செலவாகிறது.

இதனால் அப்பகுதி வாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த சோதனை சாவடி எல்லை பகுதியில் அமைந்து இருந்தால் அவர்களுக்கு கூடுதல் தொகை செலவாகாது.

நாட்டை உலுக்கி கொண்டிருக்கும் இந்த கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பழைய முடிபுரை சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பாக சோதனை நடத்தபட்டு வருகிறது.

இது தமிழக கேரளா எல்லை காக்கவிளையிலிருந்து 2கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நபர்கள் எளிதாக கொல்லங்கோடு பகுதி வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறார்கள்

இது ஒரு நோய் தொற்று பரவும் அச்சத்தையும் அந்த பகுதி சார்ந்த மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது மேலும் சில தினங்களுக்கு முன்பாக திருமண்னம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்கு பணி செய்ய ஆசாம் பகுதியை சேர்ந்த ஏழு நபர்கள் வந்து சேர்ந்தனர் பின்னர் பொதுமக்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை களியக்காவிளை சோதனை சாவடிக்கு அழைத்துச் சென்றனர்

தமிழக கேரளா பகுதியில் சோதனை சாவடி அமைந்திருந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வருவதை தவிர்த்திருக்கலாம் மேலும் இந்த சோதனை சாவடி மாற்றியமைப்பதற்கு கோரிக்கை விடுக்கும் நபர்களை மக்கள் விரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் இது சிலரின் சுய லாபத்திற்காக இந்த சோதனை சாவடி இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் பழையமுடிப்புரை காக்காவிளை பகுதிக்கு இடைப்பட்ட உள்ள பொதுமக்கள் ஏதேனும் அத்தியாவசிய தேவைக்காக கூட கொல்லங்கோடு பகுதிக்கு வரும் வேளையில் பல்வேறு கட்ட சோதனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள் மேலும்

அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் கேரள பதிவு எண் கொண்ட வாகனங்கள் இருப்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது.

கொல்லங்கோடு பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் செல்வதற்குக் கூட ஆவணங்களை காட்டி செல்ல வேண்டியுள்ளது அப்படி செல்லும் வேளையில் சிலவேளைகளில் விவசாயிகளுக்கு கூட அந்த பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது ஆனால் கேரள பகுதியில் இருந்து இங்கு டாஸ்மாக் வருபவர்களுக்கு கூட எந்தவிதமான சோதனையும் இன்றி அனுப்பப்படுகிறார்கள்.

பொது மக்களின் துயர் துடைக்க வேண்டிய அரசு அதிகாரிகள் தற்பொழுது இக்கட்டான சூழ்நிலையில் பலரின் மன உளைச்சலுக்கு காரணமாக இருக்கிறார்கள் மேலும் அந்த பகுதியில் ஒரு சாலையில் ஆபத்தான வளைவு பகுதியில் சோதனை சாவடி அமைந்துள்ளதால் விபத்து நேரிட வாய்ப்பு உள்ளது சோதனை சாவடி இருப்புறமும் அதிக ஆழம் கொண்ட பள்ளங்கள் இருப்பது குறிப்பிடதக்கது.

சில வருடங்களுக்கு முன்பு சூழால் சோதனை சாவடியில் விபத்து நேரிட்டது அனைவரும் அறிந்ததே.

கொல்லங்கோடு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அருகே ஏதேனும் அசம்பாவிதங்கள் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் மேலும் கேரள பகுதியிலிருந்து மீன் பாரம் கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்கள் புண்ணிய ஸ்தாலமான கொல்லங்கோடு ஸ்ரீ பத்திரகாளி பத்திரகாளி அம்மன் ஆலய முன்பாக நிறுத்தி வைக்கப்படுவது பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது

இதனை கருத்தில் கொண்டு அந்த சோதனை சாவடியை தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைக்கும்படி மக்கள் கோரிக்கையை ஏற்று கொல்லங்கோடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மேலும் நெடுஞ்சாலையில் நடுவே ஆக்கிரமித்து இந்த சோதனை சாவடி அமைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்த பகுதியில் விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லை பகுதியில் சோதனை சாவடி அமைத்தால்தானே வெளி மாநிலங்களில் இருந்து வருபவரை கண்காணித்து நோய் பரவலை தடுத்திட முடியும்.

நிரந்தரமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கேரள தமிழக எல்லையான காக்கவிளை பகுதியில் மாற்றக்கோரி கொல்லங்கோடு பொதுமக்கள் சார்பாகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் கண்திறந்தால் பொதுமக்களுக்கு பலன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News