கொரோனா முன்னெச்சரிக்கை - புதுச்சேரியில் மதுபானக்கடைகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவு.
கொரோனா முன்னெச்சரிக்கை - புதுச்சேரியில் மதுபானக்கடைகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவு.

கொரோனா முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிக அளவில் கூட வேண்டாம் என அரசு வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுச்சேரியில் உள்ள மதுபானக்கடைகளை மூட சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை அமர்ந்து மது அருந்தக்கூடிய மதுக்கடைகள் அனைத்தையும் மூட முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனைக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் அவர் அறிவித்தார். ஒட்டுமொத்த மதுபானக்கடைகளை மூடாமல் சில்லரை விற்பனை நடைபெறும் என முதலமைச்சரின் இந்த உத்தரவை மதுப்பிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.