மத்திய அரசின் கிசான் சம்மான் திட்டத்தால் பயனடைந்த 35 லட்சம் தமிழக விவசாயிகள் - மகிழ்ச்சியில் விவசாயிகள் !
மத்திய அரசின் கிசான் சம்மான் திட்டத்தால் பயனடைந்த 35 லட்சம் தமிழக விவசாயிகள் - மகிழ்ச்சியில் விவசாயிகள் !

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாயி (பிஎம்-கிசான்) திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 கட்டங்களாக ரூ. 6 ஆயிரம் நிதி உதவி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
விவசாயிகளுக்கு கடன் அளித்து விட்டு அதை தள்ளுபடி செய்வதை விட அவர்களுக்கு உதவித்தொகையாக அளித்தால் அரசுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்று வேளாண் நிபுணர்களால் கூறப்பட்டு வந்தது.
மத்திய அரசு 2019-20-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி செய்வதாக அறிவித்தது.
மத்திய அரசிடமிருந்து நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் இந்த நிதி அளிக்கப்பட்டு வருகிறது.
75,000 கோடி ஒதுக்கீடு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்காக மத்திய அரசு 2019-2020 நிதியாண்டில் ரூ.75,000 கோடியும், 2018-2019 நிதியாண்டில் ரூ.20,000 கோடியும் ஒதுக்கியது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்தத் திட்டம் நாட்டின் பெரும்பாலான விவசாயிகளிடத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதால் விவசாயிகள் சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரங்கள் வாங்குவதற்கு இந்த நிதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டைக் கடந்துள்ள நிலையில் நாடு முழுவதும் திட்டத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் மட்டும் 35 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.