Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய - சீன மோதல் : 35 சீன வீரர்கள் உயிரிழப்பு -அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தகவல்.! #IndiaChina #US

இந்திய - சீன மோதல் : 35 சீன வீரர்கள் உயிரிழப்பு -அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தகவல்.! #IndiaChina #US

இந்திய - சீன மோதல் : 35 சீன வீரர்கள் உயிரிழப்பு -அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தகவல்.!  #IndiaChina #US

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Jun 2020 5:00 AM GMT

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதல் பதற்றத்தை தணிக்க முயன்ற போது இரு தரப்பினரும் "வன்முறை மோதலில்" உயிரிழந்ததாக இந்திய ராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அத்தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகமும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது . மேலும் சீனா ஒருதலைப்பட்சமாக எல்லைக்கோட்டில் நிலைமையை(status quo) மாற்ற முயற்சித்ததால் கிழக்கு லடாக்கில் வன்முறை மோதல் நடந்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்தியத் தரப்பில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது, 43 சீன வீரர்கள் உயிரிழந்ததாக கருதப்படுகிறார்கள் என அரசாங்க வட்டாரங்கள் ஊடக நிறுவனமான ANI க்கு தெரிவித்தன.

இந்நிலையில், அமெரிக்க உளவுத் துறை (American Intelligence) 35 சீன வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புவதாக USNEWS செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவுக்கு கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை பகிரங்கப்படுத்தி, அவர்கள் மரணத்தை வெளிப்படையாக அங்கீகரிக்கும் பழக்கம் இல்லாத காரணத்தால், மூன்றாம் தரப்பு உளவுத் தகவலைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


சீன செய்தித் தாள்களில் நேற்று நடந்த மோதலின் செய்தி கூட வெளிவரவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.



சீனா சமீப காலங்களில் அக்கம் பக்கத்து நாடுகளுடன் எல்லைத் தகராறில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.(தெற்கு சீனக் கடற்பகுதி உட்பட) கொரானா வைரஸ் பரவல் காரணமாக உலகில் ஏற்பட்ட நெருக்கடியை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள சீனா முயல்கிறது. எல்லைப்பகுதிகளில் இந்தியா செய்து வரும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களும், அமெரிக்கா இந்தியாவுக்கு அளித்து வரும் ஆதரவும் சீனாவை கோபமடைய செய்திருக்கலாம் எனப்படுகிறது.

Cover Image Courtesy: US News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News