Kathir News
Begin typing your search above and press return to search.

ராணுவம் மீது சிறுவர்கள் கல்லெறிந்தால் சிறார் சட்டம் பாயும்- பிரிவு 370 நீக்கப்பட்ட பின் காஷ்மீரில் தொடரும் அதிரடி.!

ராணுவம் மீது சிறுவர்கள் கல்லெறிந்தால் சிறார் சட்டம் பாயும்- பிரிவு 370 நீக்கப்பட்ட பின் காஷ்மீரில் தொடரும் அதிரடி.!

ராணுவம் மீது சிறுவர்கள் கல்லெறிந்தால் சிறார் சட்டம் பாயும்- பிரிவு 370 நீக்கப்பட்ட பின் காஷ்மீரில் தொடரும் அதிரடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2020 6:24 AM GMT

குழந்தைகளை பாதுகாப்பு படையினர் மீது கல்லெறிவது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபட வைப்பவர்களின் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மறு சீரமைக்கப்பட்டு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னரே குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டம், 2005 மற்றும் அதன் மூலம் தோற்றுவிக்கப்பட்ட குழந்தைகள் நல அமைப்புகளின் அதிகார வரம்பிற்குள் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் "சிறார் நீதிச் சட்டம் 2015ன் 83வது பிரிவை தீவிரவாத அமைப்புகளால் தவறாக வழிநடத்தப்படும் சிறுவர்களின் விஷயத்தில் பயன்படுத்தலாம்" என்று ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகம் மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறார் நீதிச் சட்டத்தின் 83வது பிரிவு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தனிநபராகவோ குழுவாகவோ சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் எந்த ஒரு தனிநபர் அல்லது குழுவிற்கு 7 வருடம் சிறைக்காவல் தண்டனையும் ₹ 7 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறுகிறது.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்திய பலர் மீதும் நாட்டின் பல பகுதிகளிலும் குறிப்பாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் சிறார் நீதிச் சட்டத்தின் இந்தப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மறுசீரமைக்கப்பட்ட பின் சிறார் நீதிச் சட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால் அதன் பிரிவுகள் 15 மற்றும் 18ன் கீழ் 16-18 வயதுடைய மைனர் சிறுவர்கள் கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் சிறார் நீதி வாரியத்தின் ஒப்புதல் பெற்று அவர்களை பெரியவர்களாகக் கருதி வழக்கு பதிய. ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு பயிற்சி அளிக்கவும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

பல ஆண்டுகளாக சிறுவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து‌ நடக்கும் தீவிரவாத செயல்கள் காஷ்மீரில் பெரும் தலைவலியாக இருந்து வரும் நிலையில் சிறார் நீதிச் சட்டத்தின் இந்த பிரிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியாங்க் கனூங்கோ தெரிவித்துள்ளார்.

மேலும், "தீவிரவாதக் குழுக்கள் குழந்தைகள் தேச விரோத செயல்களில் ஈடுபடுபட ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் இதனால் அவர்களது உரிமைகளும் பறிக்கப்படுகின்றன" என்று அவர்‌ கூறியுள்ளார். தீவிரவாதக் குழுக்களுக்கு தலைமை தாங்கும் பெரும்பாலான இளைஞர்கள் குழந்தைப் பருவத்திலேயே தீவிரவாதக் குழுக்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டிய அவர், "இந்த வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தச் சட்டத்தின் பிரிவுகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News