Kathir News
Begin typing your search above and press return to search.

6.38 லட்சம் போலி பயனாளர்கள் தமிழகத்தில் அதிரடி நீக்கம்.!

6.38 லட்சம் போலி பயனாளர்கள் தமிழகத்தில் அதிரடி நீக்கம்.!

6.38 லட்சம் போலி பயனாளர்கள் தமிழகத்தில் அதிரடி நீக்கம்.!
X

Shiva VBy : Shiva V

  |  11 Nov 2020 9:54 PM IST

பிரதமரின் விவசாயிகளுக்கான உதவித்தொகை வழங்கும் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளில் 6000 ரூபாய் நிதி உதவி வழங்குவதில் இ-சேவை மையத்தினர், வங்கி ஊழியர்கள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கூட்டு சேர்ந்து போலி பயனாளர்கள் மூலம் மோசடி செய்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே இரண்டு தவணைகள் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு விட்ட நிலையில் போலி பயனாளர்களை கண்டறிந்து நீக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வந்தது.

இந்த நடவடிக்கைகளின் பயனாக போலியாக சேர்க்கப்பட்ட 6.38 லட்சம் பயனாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதியதாக தயாரிக்கப்பட்ட பட்டியலின்படி எஞ்சியுள்ளவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பிரதமரின் விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ₹ 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை ₹ 2000 வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் 44 லட்சம் பேர் பயனடைந்தனர்.

இந்நிலையில் தனியார் மற்றும் அரசு இ-சேவை மையங்களின் மூலம் ஒவ்வொருவரிடமும் ₹ 1500 வாங்கிக்கொண்டு விவசாயிகள் அல்லாதவர்கள் போலியான ஆவணங்கள் மூலம் முறைகேடாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு பயனடைந்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த குற்ற பின்னணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வேளாண் துறையின் மூலம் சி.பி.சி.ஐ.டி துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை 6.38 லட்சம் தகுதி இல்லாத போலி விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் இதுவரை நான்கு லட்சம் பேரிடம் இருந்து சுமார் 134 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள போலி பயனாளர்களிடம் இருந்து மீத தொகையை கூடிய விரைவில் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். தற்போது மூன்றாவது தவணையாக ₹ 2000 ரூபாய் டிசம்பர் மாதத்தில் வரவு வைக்கப்பட உள்ள நிலையில் போலியாக சேர்க்கப்பட்ட பயனாளர்களை நீக்கிவிட்டு புதிய பட்டியல் மூலம் இந்த விவசாய உதவித்தொகையை வேளாண்துறை வாயிலாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News