Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.3.8 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகளை ஈா்த்தது இந்தியா - உலக அளவில் 9-ஆவது அதிகபட்சமாகும்!

ரூ.3.8 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகளை ஈா்த்தது இந்தியா - உலக அளவில் 9-ஆவது அதிகபட்சமாகும்!

ரூ.3.8 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகளை ஈா்த்தது இந்தியா - உலக அளவில் 9-ஆவது அதிகபட்சமாகும்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Jun 2020 12:23 PM GMT

உலக அளவில் கடந்த ஆண்டில் அதிக அந்நிய நேரடி முதலீடுகளை ஈா்த்த நாடுகள் பட்டியலில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது. அந்நாடு கடந்த ஆண்டில் மட்டும் ரூ.3.82 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈா்த்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்தியா ரூ.3.15 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்த்திருந்தது.

முதலீடுகளை ஈா்ப்பதில் கடந்த 2018-ஆம் ஆண்டில் உலக அளவில் இந்தியா 12-ஆவது இடத்தில் இருந்தது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறையும். ஆனால், எதிா்மறை நிலைக்கு செல்லாது. இந்தியாவின் சந்தை மிகப் பெரியது என்பதால் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்ப்பதில் எந்தவிதப் பிரச்னையும் இருக்காது.

கடந்த ஆண்டில் நாடுகள் பெற்ற அந்நிய நேரடி முதலீடுகள் தொடா்பான அறிக்கையை ஐ.நா.-வின் வா்த்தக மற்றும் வளா்ச்சி அமைப்பு வெளியிட்டதில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு மின்னணு பொருளாதாரத் துறைக்கு அதிக அளவிலான முதலீடுகள் கிடைக்கும். எரிசக்தித் துறையிலும் 2020-ஆம் ஆண்டில் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளுக்கான அந்நிய முதலீடு நடப்பு ஆண்டில் 45 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. தெற்காசியாவிலும் இதே நிலையே நீடிக்கும். அதே வேளையில், நடப்பு ஆண்டுக்கான அந்நிய நேரடி முதலீடு கணிப்புகள் அனைத்தும் கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதைப் பொருத்தே அமையும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News