Top
undefined
Begin typing your search above and press return to search.

39 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுக பாராளுமன்றத்தில் வலியுறுத்தாமல் மாநில அரசை குறை கூறுவது சரியா!

39 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுக பாராளுமன்றத்தில் வலியுறுத்தாமல் மாநில அரசை குறை கூறுவது சரியா!

Praveen KumarBy : Praveen Kumar

  |  14 Feb 2020 2:24 AM GMT

சென்னை ஆழ்வார் திருநகரியில் இயக்குனர் பாலு மகேந்திராவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத் திறப்பு விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக் கொண்டார் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்.

அப்போது "காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் குற்றம் சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு தான் அதை அறிவிக்க வேண்டும் என சொல்லும் ஸ்டாலின், 39 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் தி.மு.க பாராளுமன்றத்தில் பேசி அதை அறிவிக்க வேண்டும் என சொல்ல வேண்டியது தானே? அதை விட்டுவிட்டு தமிழக அரசை குற்றம் சாட்டுவது சரியா?" என வினவினார்..

Next Story