முககவசம் இருந்தால் மட்டும் தான் சென்னை பேருந்தில் ஏறலாம் - மே 4 லிருந்து இயக்கப்படுகிறதா பேருந்துகள்.!
முககவசம் இருந்தால் மட்டும் தான் சென்னை பேருந்தில் ஏறலாம் - மே 4 லிருந்து இயக்கப்படுகிறதா பேருந்துகள்.!

கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வுக்கு பின்னர், மே 4 தேதி முதல் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் குறைந்த அளவு பேருந்துகள் இயக்க முடிவு செய்ய பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து தொழிலார்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பபட்டுள்ளது. அதில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது
பணியாளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தங்களது கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
பணியாளர்கள் பயன்படுத்தும் பொருட்களான மேசை, சேர், கணினி, ஓட்டுனர் இருக்கை, கைப்பிடி, பணப்பை மற்றும் அனைத்து கருவிகளையும் தங்களின் பணி நேரத்தின் போது இரண்டு அல்லது மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.
பணியாளர்கள் பணிமுடிந்து வீடு திரும்பும் போது பயன்படுத்திய பொருட்கள் அனைத்து சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல் சளி இருமல் கொரோனா அறிகுறி இருந்தால் விடுமுறை எடுத்துகொள்ளவும்.
அனைத்து பணியாளர்களும் தங்கள் செல்போனில் Arogya setu app பதிவிறக்கம் செய்திட வேண்டும் அதன்படி கொரோனா தொற்று அருகில் கண்டறிய பட்டால் உடனே 104 தொலைபேசிக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
பணியாளர்கள் பணியின் போது 50 மில்லி கிருமி நாசினி புட்டியை உடன் வைத்திருக்க வேண்டும். பேருந்தில் ஏறும் பயணிகள் முக கவசம் இல்லாமல் இருந்தால் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது.
பேருந்தில் பயணிக்கும் பயணிகள் சமூக இடைவெளியினை பின் பற்றி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.