Kathir News
Begin typing your search above and press return to search.

பிக் பாஸ் சீசன் 4 டீசர் வெளியானது - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

பிக் பாஸ் சீசன் 4 டீசர் வெளியானது - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

பிக் பாஸ் சீசன் 4 டீசர் வெளியானது - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 July 2020 10:13 AM GMT

பிக்பாஸ் சீசன் 4 தெலுங்கு பதிப்புக்கான டீசர் வெளியானது.பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும், இது மிகப்பெரிய அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தியில் பல ஆண்டுகளாக நடைபெற்று இருக்கிறது அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.பிக் பாஸின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் 2017 ஆம் ஆண்டில் தொடங்கியது. மலையாள பதிப்பு அதன் முதல் சீசனை 2018 இல் துவக்கியது.

கொரோனா தொற்று மட்டும் இல்லாது இருந்திருந்தால் தமிழ் தெலுங்கில் தற்போது பிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பாகி இருக்கும். கொரோனாவினால் தற்போது ஒளிபரப்பாமல் இருக்கிறது. தற்போது தெலுங்கு பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.பிக் பாஸ் தெலுங்கின் நான்காவது சீசன் துவங்கவிருக்கிறது. இந்த அறிவிப்பை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.முதல் மூன்று சீசன்களைப் போலவே, நான்காவது சீசனும் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பப்படும்.

ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே இருந்து வரும் சூழ்நிலையில் இந்த சீசன் அனைவருக்கும் ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும் எனவும் மக்கள் மிக மகிழ்ச்சியில் ஆர்வத்துடன் இருக்கின்றனர். தேதி அறிவிக்கப்படாமல் டீசர் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன.நான்காவது சீசன் ஆகஸ்ட் மாத நடுவில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்களின் உடல்நிலை குறித்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவர்கள் வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News