Kathir News
Begin typing your search above and press return to search.

நிர்பயா கனவு நிறைவேறியது.. 4 குற்றவாளிகள் தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.. 2012 முதல் 2020வரை நடந்த முழு விவரம்.!

நிர்பயா கனவு நிறைவேறியது.. 4 குற்றவாளிகள் தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.. 2012 முதல் 2020வரை நடந்த முழு விவரம்.!

நிர்பயா கனவு நிறைவேறியது.. 4 குற்றவாளிகள் தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.. 2012 முதல் 2020வரை நடந்த முழு விவரம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 March 2020 7:59 AM IST

நிர்பயா வழக்கில் தூக்கிலடப்பட்ட உள்ள 4 பேரும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

மேலும், தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை கோரிய நிர்பயா குற்றவாளிகளின் மனு நேற்று நள்ளிரவு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசி முயற்சியாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

குற்றவாளி சார்பில் ஏபி சிங் சார்பில் மனு தாக்கல் செய்தான். 4 குற்றவாளிகளில் ஒருவரின் மனுவானது குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஏபி சிங் நள்ளிரவில் உச்சநீதிமன்ற பதிவாளரின் வீட்டுக்கு சென்று மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் பவன்குப்தாவின் மனுவை அதிகாலை 2.40 மணிக்கு விசாரிக்க தொடங்கியது.

குற்றவாளி சார்பில் ஏபி சிங் வாதாடினார். பின்னர் விசாரித்த நீதிமன்றம் தூக்குத்தண்டனை நிறைவேற்ற தடை இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து 4 பேரையும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நிறுத்தினர். பின்னர் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கு கையெழுத்து போட்டார்.

பின்னர் 5:30 மணியளவில் 4 பேரையும் திகார் சிறை நிர்வாகம் தூக்கில் போட்டது. இந்த செய்தியை கேட்டு நாடு முழுவதும் அதிகாலை முதலே பொதுமக்கள் தொலைக்காட்சிகளை பார்த்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நிர்பாயாவின் வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்:

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 மிருகங்களுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி தனது ஆண் நண்பருடன், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட மனித மிருகங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.

இந்தியாவின் தலைநகர் என்று அழைக்கப்படும் டெல்லியில்தான் இந்த கொடுமை நடந்தேறியது.

இந்த வன்கொடுமையை கேள்விப்பட்டு ஒட்டு மொத்த உலகமும் அதிர்ச்சியில் உறைந்தது. அந்த சமயம் நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது.

இரண்டு அவைகளிலும் நிர்பயா விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி, பேருந்து ஓட்டுநர் ராம்சிங், அவருடைய சகோதரர் முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகிய நான்கு பேர் மட்டும் குற்றவாளிகள் என்று டெல்லி போலீசார் கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து ராம்சிங், முகேஷ், வினய் ஷர்மா, பவன்குப்தா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தாக்கூர் மற்றும் ஒரு சிறுவனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதன் பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி நிர்பயாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரை மத்திய அரசு சிங்கபூர் எலிசபெத் மருத்துவனைக்கு அனுப்பி சிகிச்சை மேற்கொண்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவ மாணவி நிர்பயா சிங்கப்பூரிலேயே உயிரிழந்தார்.

நிர்பயாவின் மரணச்செய்தி இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவர் வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி டெல்லி விரைவு நீதிமன்ற நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை தொடங்கியது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராம்சிங் சிறையிலேயே 2013ம் ஆண்டு, மார்ச் 11ம் தேதி மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டான்.

இந்த வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சிறுவன் ஆகஸ்ட் 31ம் தேதி சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நிர்பயாவின் வன்கொடுமை தொடர்புடைய வினய், அக்ஷய், பவன், முகேஷ் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தூக்குதண்டனை அளிக்கப்பட்ட பின்னர்தான் குற்றவாளிகள் ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தொடங்கினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2014ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி 4 பேர் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

இந்த தீர்ப்பையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவில் தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரினர்.

ஆனால் உச்சநீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி 4 பேருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தது.

மீண்டும் 2018ம் ஆண்டு ஜுலை 9ம் தேதி, குற்றவாளிகள் பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், ஆகியோர் 2017ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தூக்குத் தண்டனை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த சீராய்வு மனுனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான வினய்ஷர்மா கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு ஒன்றை அனுப்பினான்.

அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று டெல்லி அரசு, துணை நிலை ஆளுநரின் பரிந்துரையை ஏற்று உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது.

ஆனால், தன்னுடைய ஒப்புதல் இன்றி கருணை மனு அளிக்கப்பட்டதாக வினய் ஷர்மா தெரிவித்தார்.

2019ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி தூக்குத்தண்டனை உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யாத குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய்குமார், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனுனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத்தண்டனையை உடனடியாக நிறைவேற்றக்கோரி நிர்பயாவின் பெற்றோர், டெல்லி அரசின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஜனவரி 20ம் தேதி காலை 5:30 மணியளவில் 4 பேரின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து இன்று அதிகாலை 5:30 மணியளவில் 4 பேரையும் டெல்லி திகார் சிறை போலீசார் தூக்குத்தண்டனையை நிறைவேற்றினார்கள்.

இந்த தண்டனையை ஒட்டுமொத்த தேசமும் வரவேற்றுள்ளது. இனிமேல் தவறு செய்பவர்களுக்கு நிர்பயாவின் வழக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News