Top
undefined
Begin typing your search above and press return to search.

பெருந்துறைக்கு ஊடுருவிய 4 வங்கதேச முஸ்லிம்கள் பிடிபட்டனர்! CAA -எதிர்ப்பாளர்கள் கவனத்திற்கு!

பெருந்துறைக்கு ஊடுருவிய 4 வங்கதேச முஸ்லிம்கள் பிடிபட்டனர்! CAA -எதிர்ப்பாளர்கள் கவனத்திற்கு!

Kathir EditorBy : Kathir Editor

  |  19 Feb 2020 11:00 AM GMT

வங்கதேசத்தின் சத்கிரா மாவட்டத்தை சேர்ந்த பரூக் ஹாஜி, ஹிமுல் இஸ்லாம், சிராஜ் ஹாஜி, ரொபுயுல் இஸ்லாம் ஆகிய 4 பேரும் சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவினுள் ஊடுருவி தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள திருவேங்கடம் பாளையத்தில் ரகசியமாக தங்கியுள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமாக இருந்த இவர்களைப் பற்றிய தகவல் போலீசுக்கு கிடைத்ததைத் தொடர்ந்து பெருந்துறை போலீசார் இந்த நாலு பேரையும் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் 4 பேரும் வங்கதேசத்திலிருந்து சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவில் ஊடுருவி வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கதேசத்திலிருந்து சட்டத்திற்குப் புறம்பாக ஊடுருவி தமிழகத்தில் பதுங்கி உள்ளவர்கள் எவ்வளவு பேர் என்பது தெரியவில்லை.

தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழகத்தில் பதுங்கியுள்ள வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் கண்டுபிடிக்கப்பட்டு துரத்தி அடிக்கப்படுவார்கள்.

இவர்களைப் போன்று பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவி தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்கி உள்ளவர்களுக்கு குடியுரிமை கொடுக்கவேண்டும் என்பதற்காகவே இங்குள்ள முஸ்லிம் மதவெறி அமைப்புகளும், முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும் கலவரத்தை தூண்டி வருகின்றன. இவர்களை அரசியல் சுயலாபத்திற்காக திமுக பின்னணியில் இருந்து இயக்கி வருகிறது.

ஆகவேதான் நடுநிலையாளர்களும், தேசபக்தர்களும் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு தேசிய குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய மக்கள் தொகை பதிவேடும், தேசிய குடியுரிமை பதிவேடும் அவசியம் வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

Next Story