ஊரடங்கு உத்தரவு சட்டத்தை மீறி மதுபானங்கள் விற்பனை செய்த நான்கு மதுபானக் கடைகள் மற்றும் இரண்டு சாராயக் கடைகளின் உரிமம் ரத்து.!
ஊரடங்கு உத்தரவு சட்டத்தை மீறி மதுபானங்கள் விற்பனை செய்த நான்கு மதுபானக் கடைகள் மற்றும் இரண்டு சாராயக் கடைகளின் உரிமம் ரத்து.!

புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியர் ஆதர்ஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுபான விற்பனைக்கு புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் சில மதுபான கடைகள் மற்றும் சாராயக் கடைகளில் தொடர்ந்து கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து வந்த புகாரை அடுத்து மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் கடைகளின் அனுமதி சான்றிதழ் ரத்து செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது காரைக்கால் மாவட்டத்தில் 4-மதுபானக்கடைகளும், 2-சாராயக் கடைகளில் இருந்து கள்ளத்தனமாக விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டதால் அக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் காரைக்கால் மாவட்டத்தில் மூன்று நாட்களாக தாசில்தார் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான கடைகள் மற்றும் சாரயக்கடைகளில் உள்ள மது பாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கணக்கெடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு அனைத்து கடைகளும் ஆய்வுசெய்து சரியான முறையில் கணக்கெடுக்கப்பட்ட மது இருந்தால் தான் மீண்டும் விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.
அப்படி இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவுன் எச்சரித்தார். மேலும் மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு தனி தொலைபேசி எண்(04368-228801) உருவாக்கப்பட்டுள்ளது அதில் தங்களது குறைகளை கூறினாள் உடனடியாக ஆலோசனை கூறப்படும் என்றும் துணை ஆட்சியர் தெரிவித்தார்.