கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் 40 இந்தியர்கள் பலி
கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் 40 இந்தியர்கள் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இதுவரை 16 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இதுவரை 5 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 17ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் 40 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்து பலியாகியுள்ளதாக அங்கிருக்கும் இந்திய சமூகத்தினர் தெரிவித்தனர். இதுமட்டுமல்லாமல் 1500 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாநிலத்தில் தான் ஒரு கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்குதான் அதிகமான இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். நியூஜெர்சி மாநிலத்தில் சின்ன இந்தியாவே அப்பகுதியில் உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 17 பேர் கேரளா, 10 பேர் குஜராத், 4 பேர் பஞ்சாப், இரண்டு பேர் ஆந்திரா மற்றும் ஒருவர் ஒடிஷாவை சேர்ந்தவர்கள்.இவர்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள். இதில் ஒருவர் மட்டும் 21 வயது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2519353