40 லட்சம் மதிப்பிலான கொரோனா நோய் தடுப்பு சித்த மருத்துவ மூலிகைகளை வழங்கி அசத்தும் அமைச்சர் பாஸ்கரன்.!
40 லட்சம் மதிப்பிலான கொரோனா நோய் தடுப்பு சித்த மருத்துவ மூலிகைகளை வழங்கி அசத்தும் அமைச்சர் பாஸ்கரன்.!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமைகள் கொரோனா நோய் தடுப்புக்கான 14 வகையான சித்த மருத்துவ பொடிகளை 445 கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகள் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சித்த மருத்துவம் மூலிகை பொடிகளை அனைத்து பஞ்சாயத்துத் தலைவர்களிடம் வழங்கினார்.
இந்த சித்தர் மூலிகைகளை உள்ள அனைத்து மக்களுக்கும் வழங்கி, காய்ச்சி குடிக்க வலியுறுத்துமாறு அனைத்து பஞ்சாயத்து தலைவர் களையும் அமைச்சர் பாஸ்கரன் கேட்டுக்கொண்டார். காய்ச்சல், இருமல், மூச்சு விட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர் தினசரி இரண்டு முறை 60 மில்லி பருக சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
டெங்கு காய்ச்சலுக்கு எப்படி நிலவேம்பு குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதோ அதேபோன்று கொரோனாக்கு எதிராக கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என மத்திய அரசின் ஆயுஷ் துறை பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.