Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா நெருக்கடிக்கு உதவியாக தனது வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு ரூ.46,038 கோடி ஒதுக்கீடு - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு.!

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 April 2020 11:44 AM IST

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

மத்திய வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு ஏப்ரல் மாத பங்கீடாக ரூ.46,038 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 15 -ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தத் தொகை வழங்கப்படவுள்ளது. கரோனா நோய்த்தொற்றால் எழுந்துள்ள நெருக்கடியை மாநிலங்கள் எதிா்கொள்ள உதவிடும் வகையில் சிறப்பு பங்கீடாக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு ரூ 7.84 லட்சம் கோடி பங்கீடு வழங்கவேண்டிவரும் என நிகழாண்டுக்கான பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 41 சதவீதமும், யூனியன் பிரதேசங்களுக்கு 1 சதவீதமும் பங்கீடு வழங்க 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.

மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 42 சதவீதம் பங்கீடு வழங்க 14-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News