சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய 4 வயது சிறுவன்!
சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய 4 வயது சிறுவன்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் 4 வயது சிறுவன் ஒருவன் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 வயது ஹேமந்த் என்ற சிறுவன் சைக்கிள் வாங்குவதற்காக வைத்திருந்த 971 ரூபாயை சேமித்து வைத்துள்ளான். அதனை அம்மாநில அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையாவிடம் வழங்கி அந்த பணத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கொடுத்து கொரோனா நிதியில் சேர்த்து விடுங்கள் என்று தெரிவித்துள்ளான். பணத்தைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் தான் உனக்கு சைக்கிள் வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.
Andhra Pradesh: A 4-year-old boy Hemanth has donated his savings of Rs 971, with which he wanted to buy a bicycle, to Chief Minister's Relief Fund in Vijayawada. He handed over the money to state minister Perni Venkatramaiah at YSRCP office in Tadepalli. #Coronavirus pic.twitter.com/L1oc3bTGf3
— ANI (@ANI) April 7, 2020