Kathir News
Begin typing your search above and press return to search.

20 நாட்களில் 5 தங்க பதக்கங்கள்! இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அசத்தல்! பிரதமர் மோடி வாழ்த்து!!

20 நாட்களில் 5 தங்க பதக்கங்கள்! இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அசத்தல்! பிரதமர் மோடி வாழ்த்து!!

20 நாட்களில் 5 தங்க பதக்கங்கள்! இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அசத்தல்! பிரதமர் மோடி வாழ்த்து!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 July 2019 8:58 AM GMT



செக் குடியரசு நாட்டில் நடந்த தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் நேற்று தங்கப் பதக்கம் வென்றார். இந்த ஜூலை மாதத்தில் ஹிமா தாஸ் வெல்லும் 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.


செக் குடியரசு நாட்டில் உள்ள பராக் நகரில் சர்வதேச தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் இந்திய சார்பில் 400 மீட்டர் ஓட்டத்தில் வீராங்கனை ஹிமா தாஸ் பங்கேற்றார். இதில் நேற்று நடந்த மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில், பந்தையத் தொலைவை 52.09 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை ஹிமா தாஸ் வென்றார்.





கடந்த 2-ம் தேதியில் இருந்து ஹிமா தாஸ் ஐரோப்பா கண்டத்தில் வெல்லும் 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன் கடந்த 2-ஆம் தேதி போலந்தில் நடந்த போஸ்னன் அத்தலெட்டிக் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 23.65 வினாடிகளில் கடந்த முதல் தங்கம் வென்றார்.


அடுத்ததாக, 7-ஆம் தேதி போலந்தில் குட்னோ தடகளப் போட்டியல் 200 மீட்டர் ஓட்டத்தில் 23.97 வினாடிகளில் பந்தைய தொலைவைக் கடந்து 2-வது தங்கப் பதக்கத்தை ஹிமா தாஸ் கைப்பற்றினார்.


பின்னர் செக்குடியரசில் கிளாட்னோ அத்தெலடிக் மீட் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் தங்கமும், செக் குடியரசில் கடந்த புதன்கிழமை நடந்த தபூர் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 23.43 வினாடிகளில் பந்தைய தொலைவைக் கடந்து ஹிமா தாஸ் தங்கம் வென்றிருந்தார்.


எனவே, கடந்த 2-ஆம் தேதியில் இருந்து ஹிமா தாஸ் 5-வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான ஹிமா தாஸ்
"திங் எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படுகிறார்.


ஹிமா தாசின் இந்த அரிய சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “கடந்த சில நாட்களில் ஹிமா தாஸ் செய்துள்ள அரிய சாதனைகளால் இந்தியா பெருமை படுகிறது. பல்வேறு ஓட்டப்பந்தயங்களில் 5 தங்க பதக்கங்களை அவர் வென்றுள்ளது, நாம் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹிமா தாசின் சாதனைகள் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News