Kathir News
Begin typing your search above and press return to search.

உபியில் 50 இடங்களிலும், முதல்வர் யோகியையும் வெடிகுண்டு வைத்து கொல்லப் போவதாக வாட்ஸ்ஆப் மூலம் மிரட்டல்.! FIR பதிவு.! #UP #Yogi

உபியில் 50 இடங்களிலும், முதல்வர் யோகியையும் வெடிகுண்டு வைத்து கொல்லப் போவதாக வாட்ஸ்ஆப் மூலம் மிரட்டல்.! FIR பதிவு.! #UP #Yogi

உபியில் 50 இடங்களிலும், முதல்வர் யோகியையும் வெடிகுண்டு வைத்து கொல்லப் போவதாக வாட்ஸ்ஆப் மூலம் மிரட்டல்.! FIR பதிவு.! #UP #Yogi

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jun 2020 2:32 AM GMT

உ.பி. காவல்துறையின் அவசர கால வாட்ஸ் ஆப் (UP112) எண்ணிற்கு ஒரு நபர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை "வெடிகுண்டு மூலம்" கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளான். மேலும் உத்தரபிரதேசத்தில் 50 வெவ்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப்படும் என அவன் எச்சரிக்கை விடுத்துள்ளான்.

வாட்ஸ்அப்பில் எழுதப்பட்ட செய்தியில் அடையாளம் தெரியாத ஒருவன் "நாங்கள் முழு மாநிலத்தையும் வெடிகுண்டுகள் வைத்து தகர்த்தெறிவோம். உத்தரபிரதேச அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கும்" என்று கூறியுள்ளான்.



இந்த வழக்கில் கவுதம் பள்ளி காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக லக்னோ காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. குற்றப்பிரிவு மற்றும் சைபர் செல்லிற்கு தகவல் அளிக்கப்பட்டு, வாட்ஸ்அப் செய்தியின் பின்னால் இருக்கும் அடையாளம் தெரியாத நபருக்கான தேடல் தொடங்கியுள்ளது.

இதற்கு முன்பு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக மும்பை சுன்னபட்டி பகுதியில் உள்ள மடா காலனியைச் சேர்ந்த கம்ரான் அமின் கான் என்ற 25 வயது நபரை கடந்த மாதம் மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படை (ATS) கைது செய்தது இங்கே கவனிக்கத்தக்கது.அப்போதும் இதே போல், வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தான் மிரட்டல் வந்தது. விசாரித்தபோது, ​​கம்ரான் குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஆனால் இதை ஒரு 'குறும்பு' (Prank) என மகாராஷ்டிரா போலீஸ் அழைத்தது.

யோகி ஆதித்யநாத்தை கொலை செய்யக் கோரி, ஏப்ரல் 24 ம் தேதி, சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவிற்குப் பின்னர், காசிப்பூரைச் சேர்ந்த தன்வீர் கான் என்ற பீகார் கான்ஸ்டபிளை உத்தரபிரதேச காவல்துறை கைது செய்தது, சமூக ஊடகங்களில் வைரலாகியது.

குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு போலீஸ்காரர் என்று கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​காவல் துறையில் ஒரு பதற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாலந்தா மாவட்டத்தில் உள்ள டிப்நகர் போலீசாரின் உதவியுடன் நளந்தாவைச் சேர்ந்த கானை உ.பி. போலீசார் கைது செய்தனர்.

Next Story