Begin typing your search above and press return to search.
கொரோனா வைரஸ் தடுப்புக்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு - அதிரடி காட்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
கொரோனா வைரஸ் தடுப்புக்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு - அதிரடி காட்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

By :
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுக்க ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சட்டசபையில் பேசுகையில்,
தமிழகத்தில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்க தடையேதும் இல்லை. போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அரசின் உத்தரவுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா குறித்த வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக கூடுதலாக ரூ 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. மருத்துவமனையில் 92.406 படுக்கை வசதிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
Next Story