Kathir News
Begin typing your search above and press return to search.

7 வயது சென்னை சிறுவனுக்கு 526 பற்கள்! ஆபரேசன் மூலம் அகற்றினர்!!

7 வயது சென்னை சிறுவனுக்கு 526 பற்கள்! ஆபரேசன் மூலம் அகற்றினர்!!

7 வயது சென்னை சிறுவனுக்கு 526 பற்கள்! ஆபரேசன் மூலம் அகற்றினர்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2019 11:21 AM GMT



சென்னையை சேர்ந்தவர் பிரபுதாஸ். இவரது மகன் ரவீந்திரன். இவனுக்கு 3 வயதில் வாயின் கீழ் தாடையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்க முடியவில்லை.





தற்போது ரவீந்திரனுக்கு வயது 7 ஆகிறது. அவனது கீழ்தாடை வீக்கம் அதிகரித்து, வலியும் அதிகமானது. இதனால் அவனை, சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.


அவனுக்கு அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டபோது அவனின் வாயில் சிறுதும் பெரிதுமாக வளர்ச்சியடையாத பற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை உறுதி செய்ய சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. பின்னர் மருத்துவர் ரமணி மற்றும் அவருடைய மருத்துவக் குழு, சிறுவன் ரவீந்திரனுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.


அவனது கீழ்தாடையில் 4X3 அளவில் கட்டி ஒன்று இருந்தது. அந்த கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து நீக்கினர்.





அப்போது அந்த கட்டிக்குள் நூற்றுக்கணக்கான பற்கள் இருந்ததை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த கட்டிக்குள் 526 பற்கள் இருந்துள்ளது. அந்த பற்களின் மொத்த எடை 200 கிராம் ஆகும்.


இது குறித்து மருத்துவக் குழு கூறும்போது, “உலகில் இது போன்று ஒருவர் வாயில் இருந்து 526 பற்கள் நீக்கப்படுவது இதுவே முதல்முறை” என்று கூறினார்கள்.





செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சு இதற்கு முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் டாக்டர்கள் தெரிவித்தனர்.




https://youtu.be/RmEYBC6mybM

Next Story
கதிர் தொகுப்பு
Trending News