Kathir News
Begin typing your search above and press return to search.

53.67 பில்லியன் முதலீட்டில் சாம்சங் நிறுவனம் உ.பி.யில் பிரம்மாண்ட தொழிற்சாலை - வரும் ஆண்டிலேயே உற்பத்தி தொடங்க உள்ளதாக அறிவிப்பு.!

53.67 பில்லியன் முதலீட்டில் சாம்சங் நிறுவனம் உ.பி.யில் பிரம்மாண்ட தொழிற்சாலை - வரும் ஆண்டிலேயே உற்பத்தி தொடங்க உள்ளதாக அறிவிப்பு.!

53.67 பில்லியன் முதலீட்டில் சாம்சங் நிறுவனம் உ.பி.யில் பிரம்மாண்ட தொழிற்சாலை - வரும் ஆண்டிலேயே உற்பத்தி தொடங்க உள்ளதாக அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jun 2020 2:00 AM GMT

செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி வகிக்கும் நிறுவனம் தென் கோரிய நாட்டை சேர்ந்த சாம்சங். இந்தியாவில் செல்போன் விற்பனை செய்து வரும் வெளிநாட்டு நிறுவனங்களில் பிரதான இடத்தை பிடித்துள்ள இந்த நிறுவனம் உத்தரபிரதேசத்தில் ரூ. 53.67 பில்லியன் முதலீட்டில் பிரம்மாண்ட தொழிற்ச்சாலை தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், சென்ற 2019 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் நடத்தப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு மாநாட்டில் இது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்த நிறுவனம் கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது.

மாநாட்டின்போது அறிவிக்கப்பட்ட வரி மற்றும் ஊக்கச்சலுகைகளை உ.பி அரசு உறுதிசெய்யும் நிலையில் தொடக்கப்பணிகளை விரைவில் மேற்கொள்ள தயார் என்றும் , 2021 ஆம் ஆண்டிலேயே உற்பத்தியை தொடங்க உத்தேசித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

தொடக்கத்தில் 1300 தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்றும் நிறுவனம் கூறியுள்ளது.

இது குறித்து உத்தரபிரதேச தொழில் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சதீஷ் மஹானா கூறுகையில் " சாம்சங் நிறுவனம் கேட்ட சலுகைகள் தருவதில் பரிசீலிப்பதாகவும், அது மத்திய அரசின் மேக் இன் இந்தியா விதிகளுக்கு உட்பட்டு விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

உததரபிரதேசத்தில் ஏற்கனவே சாம்சங் நிறுவனத்தின் பிரம்மாண்ட தொழிற்சாலை ஓன்று இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற 2019 ஆம் ஆண்டு உ.பி.யில் நடைபெற்ற வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு மாநாட்டில் ரூ. 3 இலட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.deccanchronicle.com/business/companies/170620/samsung-to-set-up-rs-54-billion-smartphone-display-plant-in-india.html

Next Story