55 வயதுக்கு மேலான காவலர்களுக்கு விடுமுறை - மாநகர காவல் துறை அதிரடி!
55 வயதுக்கு மேலான காவலர்களுக்கு விடுமுறை - மாநகர காவல் துறை அதிரடி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவிலும் வேகமாக பரவி உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 20 அதிகாரிகள் உட்பட 107 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது அவர்கள் சிகிச்சையில் பெற்று வருகின்றனர். மேலும், சென்ற 3 நாட்களில் 3 காவல்துறையினர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் 55 வயதுக்கு மேல் உள்ள காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது இதனைப்பற்றி மும்பை காவல்துறையின் மூத்த அதிகாரி பேசுகையில்: சென்ற சில நாட்களில் 3 காவலர்கள் தொடர்ந்து கொரோனாவால் பலியாகியுள்ளனர். இன்னும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள். இதனால் காவலர்களையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் பாதுகாக்கும் வகையில் 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருக்கும்படி தெரிவித்துள்ளோம். மேலும் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அதில் இருந்து குணம் ஆகுவது கஷ்டமானது. அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் செல்லும் காவலர்களின் சம்பளம் பிடிக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source: Dina Thanthi