Top
Kathir News
Begin typing your search above and press return to search.

5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Feb 2019 8:18 AM GMT

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி எந்த ஒரு அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிபாளையம் அருகே துணைமின் நிலையம் கட்டுமான பணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுமா என்பது குறித்த பொதுநலன் வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் இது பற்றி முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story